அயலான் படத்திற்கு வரும் பெரிய சிக்கல்.. வசூல் பாதிக்கப்படுமா
அயலான்
பல கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் அயலான். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப விஷயங்கள் காரணமாக அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

அதே பொங்கல் பண்டிகை அன்று கிட்டதட்ட 4 திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இதில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படமும் ஒன்று.
பெரிய சிக்கல்
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அயலான் திரைப்படம் வெளிவரும் அதே நாளில் லால் சலாம் திரைப்படமும் வெளிவருவதால் கண்டிப்பாக அயலான் படத்தின் வசூல் அடிவாங்க வாய்ப்பு இருப்பதாக திரை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இந்நிலையில், ரஜினியின் லால் சலாம் படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். இதனால் தமிழ்நாட்டில் லால் சலாம் படத்திற்கு அதிக திரையரங்கங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், அயலான் திரைப்படத்திற்கு இது பெரிய சிக்கல் என்றும் திரை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.
We are proud to join hands with @LycaProductions for the Tamil Nadu Theatrical distribution of #LalSalaam ?#LalSalaamFromPongal #MoideenBhaiArrivesOnPongal?@rajinikanth @ash_rajinikanth @arrahman @TheVishnuVishal @vikranth_offl @DOP_VishnuR @RamuThangraj @BPravinBaaskar… pic.twitter.com/RD3uhiPGXh
— Red Giant Movies (@RedGiantMovies_) October 12, 2023
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri