ரத்த வெள்ளத்தில் அயலி... கதறி அழும் குடும்பம் - இன்றைய எபிசோட்

By Karthick Raja Nov 03, 2026 09:01 AM GMT
Report

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘அயலி’ தொடரில், யாருமே எதிர்பார்க்காத அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

லாரி விபத்து நடந்த இடத்தில் பரபரப்பு!

லாரி விபத்து நடந்த இடத்துக்கு போலீஸும் சிவாவின் ஆட்களும் வருகிறார்கள். ஆனால், அங்கே வர்மாவையும் கபிலனையும் காணாததால் குழப்பமடைகிறார்கள். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கச் சொல்கிறார்கள்.

ரத்த வெள்ளத்தில் அயலி... கதறி அழும் குடும்பம் - இன்றைய எபிசோட் | Ayali Serial Shocking Episode 03 11 2025

இதற்கிடையில், கபிலனை தேடி அயலி ஷீலா சொன்ன இடத்துக்கு வருகிறாள். அயலி குறித்த உண்மை அறிந்த ரித்திகாவும் அங்கு வர சிலர் அவளை தாக்க முயற்சி செய்ய, அயலி துணிச்சலாக அவர்களுடன் மோதி தங்கையைக் காப்பாற்றப் போராடுகிறாள்.

அயலியை மன்னித்த கபிலன்... அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி!

அந்த நேரத்தில் அங்கே வரும் கபிலன், “என் அக்காவுக்காக நீ செய்த தியாகத்தை இப்போ நான் புரிஞ்சுக்கிட்டேன். உன்னை மன்னிச்சிட்டேன்” என்று சொல்லி அயலியிடம் சமாதானமாக பேசுகிறான்.

ரத்த வெள்ளத்தில் அயலி... கதறி அழும் குடும்பம் - இன்றைய எபிசோட் | Ayali Serial Shocking Episode 03 11 2025

இதைக் கேட்டு அனைவரும் நிம்மதியடைகிறார்கள். இனி எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கும் அந்த நேரத்தில், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஷீலா திடீரென ரித்திகாவை நோக்கிப் பாய்கிறாள். கையில் வைத்திருந்த கத்தியால் தாக்க முயற்சிக்க அயலி குறுக்கே வந்து விட அயலியைச் சரமாரியாகக் குத்துகிறாள்.

ரத்த வெள்ளத்தில் அயலி... கதறித் துடிக்கும் கபிலனும் ரித்திகாவும்!

ஷீலா கத்தியால் குத்தியதில் அயலி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுகிறாள். இதைப் பார்த்த கபிலனும் ரித்திகாவும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். ரித்திகா “அக்கா...” என்று கதறி அழுகிறாள்.

ரத்த வெள்ளத்தில் அயலி... கதறி அழும் குடும்பம் - இன்றைய எபிசோட் | Ayali Serial Shocking Episode 03 11 2025

உயிருக்குப் போராடும் அயலியை சிவாவும் அங்கிருப்பவர்களும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள். அதே நேரத்தில், ஆயுதங்களை ஏற்றிச் சென்ற வாகனம் பாதுகாப்பாக எல்லையைக் கடந்துவிட்டதாக சிவாவுக்கு போன் வருகிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அயலி... பதற்றத்தில் குடும்பம்!

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வர்மா மயங்கி விழுகிறான். மறுபக்கம், அயலி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகிறாள். அவளுடைய நிலையைப் பார்த்துத் துடிக்கும் ரித்திகாவும் கபிலனும், “அக்கா, உனக்கு எதுவும் ஆகாது” என்று கண்ணீருடன் கதறி அழுகிறார்கள்.

ரத்த வெள்ளத்தில் அயலி... கதறி அழும் குடும்பம் - இன்றைய எபிசோட் | Ayali Serial Shocking Episode 03 11 2025

அயலி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் இந்தச் சூழலில், அவள் மீண்டும் உயிர் பிழைத்து வருவாளா? ஷீலா செய்த இந்தக் கொடூரச் செயலுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? வர்மாவுக்கு என்ன ஆனது? என்ற பல கேள்விகளுக்கு ‘அயலி’ தொடரை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US