அயலியைப் பின்தொடரும் போலீஸ்... இந்திராணியின் அடுத்த அதிரடி பிளான் - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

By Karthick Raja Oct 20, 2026 09:15 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. நேற்றைய எபிசோடில் அயலி ஆட்டோவில் கிளம்பிச் செல்ல, அவளுக்கே தெரியாமல் செல்லம் பின்னாடியே செல்கிறாள். இன்னொரு பக்கம், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் அனுப்பிய ஆளும் அயலியைத் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருக்க இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அயலியைப் பின்தொடரும் போலீஸ்... இந்திராணியின் அடுத்த அதிரடி பிளான் - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்! | Ayali Serial Today Episode 20 10 2026

அதாவது, சிவாவுடன் போனில் பேசிக்கொண்டே நேராக ஒரு ஸ்டேஷனரி கடைக்குச் செல்லும் அயலி, அங்கே சார்ட் பேப்பர் உள்ளிட்ட சில பொருட்களை வாங்குகிறாள். இதையெல்லாம் பார்க்கும் செல்லத்துக்கு, அயலி எதற்காக இந்தப் பொருட்களை வாங்குகிறாள் என்று புரியாமல் குழப்பம் ஏற்படுகிறது. பொருட்களை வாங்கியதும் அயலி மீண்டும் ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்புகிறாள்.

வீட்டுக்கு வந்ததும் ஹாலில் இருந்தவர்கள், அவள் கையில் வைத்திருந்த பொருட்களைப் பார்த்து என்னவென்று விசாரிக்கிறார்கள். அதற்கு அயலி, சிவாவின் பள்ளியில் நடக்கப்போகும் கலை நிகழ்ச்சிக்காகத் தேவையான பொருட்கள்தான் இவை என்று சொல்லிச் சமாளிக்கிறாள். அவள் சொல்வதை மற்றவர்கள் நம்பிவிடுகிறார்கள். ஆனால், ரித்திகாவுக்கு மட்டும் அயலி மீது சந்தேகம் அதிகமாகிறது. இதற்கிடையில், விஜயகுமாருக்கு போன் செய்யும் அவனுடைய ஆள், அயலி ஸ்டேஷனரி கடையில் சில பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிய விவரத்தைச் சொல்கிறான்.

அயலியைப் பின்தொடரும் போலீஸ்... இந்திராணியின் அடுத்த அதிரடி பிளான் - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்! | Ayali Serial Today Episode 20 10 2026

இதற்கிடையே, இந்திராணி கபிலனைத் தொடர்புகொண்டு, “இன்னைக்கு ஒரு முக்கியமான பிரேக்கிங் நியூஸ் போடப்போறேன்” என்று சொல்கிறாள். அது என்ன நியூஸ் என்று கபிலன் கேட்க, “இன்னைக்கு மாலை 7 மணிக்கு எல்லாருக்கும் தெரியவரும். அப்போ நீயும் தெரிஞ்சுக்கோ!” என்று சொல்லி சஸ்பென்ஸை அதிகப்படுத்துகிறாள் இந்திராணி.

மறுபக்கம், வீட்டில் ஏதோ ரகசியமாக நடப்பதை உணரும் ரித்திகா, உடனே மோனிகாவுக்குப் போன் செய்து நடந்த விஷயங்களைச் சொல்கிறாள். அதைக் கேட்ட மோனிகா, “நீ அங்கேயே இருந்து என்ன நடக்குதுன்னு கவனிச்சு, உண்மையைக் கண்டுபிடி” என்று சொல்கிறாள். இதனால், அயலியின் அறையில் என்ன ரகசியம் ஒளிந்திருக்கிறது என்பதை எப்படியாவது கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று ரித்திகாவும் சதித்திட்டம் தீட்டுகிறாள்.

அயலியைப் பின்தொடரும் போலீஸ்... இந்திராணியின் அடுத்த அதிரடி பிளான் - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்! | Ayali Serial Today Episode 20 10 2026

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US