ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா, விவரம் இதோ
ஆயிரத்தில் ஒருவன்
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்.
இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
ஆயிரத்தில் ஒருவன் வெளிவந்த சமயத்தில் மக்கள் மத்தியில் தோல்வியை தழுவிஇருந்தாலும், தற்போது ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த படைப்புகளில் ஒன்றாக இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மொத்த வசூல்
அதன்படி, இப்படம் உலகம் முழுக்க சுமார் ரூ. 53 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
விரைவில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
