என் குடும்பத்திற்கே அவமானம்.. இந்த ஒரு காரணத்திற்காக இன்னும் உயிரோடு இருக்கிறேன்: பிக் பாஸ் ஐஷு
பிக் பாஸ் வீட்டில் நிக்சன் உடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் ஐஷு. அதை பற்றி மற்ற போட்டியாளர்கள் விமர்சித்தபோதும் ஐஷு அதை கேட்கவில்லை. ஐஷு மற்றும் நிக்சன் முத்தம் கொடுத்துக்கொள்ளும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
எங்கள் மகளை வெளியில் அனுப்பிடுங்க என ஐஷுவின் பெற்றோர் பிக் பாஸ் ஷோ குழுவிடம் சண்டை போட்டபிறகு தான் ஐஷுவை கடந்த வாரம் வெளியில் அனுப்பினார்கள்.
உருக்கமான பதிவு
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் தான் செய்த விஷயங்களுக்கு எல்லாம் மன்னிப்பு தெரிவித்து ஐஷு மிகவும் உருக்கமாக பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.
"என் குடும்பத்திற்கே அவமானம் நான். என் உயிரை விடவும் முடிவெடுத்துவிட்டேன், ஆனால் என் மீது பெற்றோர் வைத்திருக்கும் கடைசி நம்பிக்கைக்காக தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்" என ஐஷு கூறி இருக்கிறார்.
"அந்த வீட்டில் காதல், நட்பு என சில விஷயங்கள் என் கண்ணை மறைத்துவிட்டது. தவறு செய்தது நான், என்னை என்ன வேண்டுமானலும் சொல்லுங்கள். என் குடும்பத்தை விட்டுவிடுங்கள்" என்றும் அவர் உருக்கமாக கேட்டிருக்கிறார்.