விவாகரத்து முடிவில் இருக்கும் நிலாவிடம் தனது விருப்பத்தை கூறிய சோழன், அவரின் முடிவு.. அய்யனார் துணை புரொமோ
அய்யனார் துணை
அய்யனார் துணை, இளைஞர்கள் கொண்டாடும் டாப் தொடராக உள்ளது.
ஒரு சந்தோஷமே இல்லாத 4 அண்ணன்-தம்பிகள் இருண்ட வாழ்க்கையில் விளக்கு ஏற்றுவது போல பிரகாசமாக வருகிறார் ஒரு பெண். சேரன், சோழன், பல்லவன், பாண்டியன் இவர்களது வாழ்க்கையில் நிலா நுழைய கதையே அட்டகாசமாக அமைந்துள்ளது.
இப்போது கதையில் பாண்டியன்-வானதி காதல் பிரச்சனை ஓடுகிறது, இன்னொரு பக்கம் நிலா, சோழனிடம் இருந்து விவாகரத்து பெற மும்முரமாக உள்ளார்.
புரொமோ
இன்றைய எபிசோடில், நிலா சோழனுக்காக யோசித்து பல்லவனிடம், வானதி அண்ணா பேசியதை கூற வேண்டாம் என்கிறார். இன்னோரு பக்கம் பாண்டியனிடம் வந்து வானதி சண்டை போடுகிறார்.
தற்போது வெளிவந்துள்ள தொடரின் புரொமோவில், நிலா நீதிமன்றம் கிளம்பலாமா என கேட்க சேரன் கொஞ்சம் நீங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்வது குறித்து யோசிங்கள் என்கிறார், ஆனால் அவரோ முடியாது என கிளம்புகிறார்.
பின் சோழன் தனது மனதில் இருப்பதை நிலாவிடம் கூறுகிறார், அவர் என்ன முடிவு எடுப்பாரோ, பொறுத்திருந்து காண்போம், புரொமோ இதோ,