வீட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்ட அய்யனார் துணை குடும்பம்... பரபரப்பு புரொமோ
அய்யனார் துணை
அண்ணன்-தம்பிகளின் பாசம் என்றால் இப்படி இருக்கனும் என எதார்த்தமான கதைக்களத்துடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் அய்யனார் துணை.
இந்த வாரம் கதையில் ராகவிடம் சேரன், நிலா-சோழன் திருமணம் எப்படி நடந்தது என மொத்த கதையையும் கூற அவர் நிலாவிடம் கொஞ்சம் உரிமையாக பேசினார்.
இதனால் வீட்டிற்கு கோபத்தில் வந்த நிலா, சேரனை பார்த்து அறிவு இருக்கா இப்படியா செய்வது என கோபமாக திட்ட சோழனும் தனது அண்ணனை அடிக்கும் வரை சென்றுவிட்டார். ஆனால் இன்றைய எபிசோடில் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்க பிரச்சனையும் முடிந்தது.

புரொமோ
எல்லோரும் மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆகி அவரவர் வேலையை கவனிக்க ஆரம்பித்தனர். அப்போது திடீரென நிலா அறைக்குள் பாம்பு வர அவர் மிகவும் பயந்துள்ளார். சேரன், சோழன், பாண்டியன் பாம்பை வெளியே அனுப்பிவிட்டனர் ஆனால் நிலா இந்த வீட்டில் எப்படி இருப்பது என புலம்புகிறார்.

இதனால் அவர்கள் வீட்டில் சில மாற்றங்கள் செய்யலாம் என சிமெண்ட் எல்லாம் வாங்கி பூசும் நேரத்தில் நடேசன் சகோதரன், சகோதரி போலீசுடன் வருகிறார்கள்.

இது எங்களுடைய வீடும் தான், இதில் ஏதாவது மாற்றம் செய்தால் வீட்டை சீல் வைக்க வேண்டும் என்ற ஆர்டர் உள்ளது என பத்திரம் காட்ட போலீசார் வீட்டிற்கு சீல் வைக்கிறார்கள். சேரன், சோழன், நிலா என மொத்த குடும்பமும் வீட்டில் இருந்து துரத்தப்படுகிறார்கள்.
இதோ புதிய புரொமோ,
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan