செம சந்தோஷத்தில் நிலா, சோழனை கட்டிப்பிடித்த ஒரு ஜாலி தான்.. அய்யனார் துணை புரொமோ
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு தொடர்.
4 அண்ணன்-தம்பிகளும் வாழும் வீட்டில் எதிர்ப்பாராத விதமாக திருமணம் செய்துவரும் பெண் இவர்களை சுற்றியே கதை செல்கிறது. அண்மையில் சேரன்-கார்த்திகா திருமணம் பற்றிய காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வந்தன.
கார்த்திகா கழுத்தில் தாலி கட்டும் வரை சென்ற திருமணம் அப்படியே நின்றுவிட்டது, அவருக்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளையுடன் திருமணமும் முடிந்துவிட்டது.
இதனால் சேரன் கதறி அழுத காட்சிகள் எல்லாம் பார்ப்போரையும் அழ வைத்துவிட்டது.
புரொமோ
கடைசி எபிசோடில் நிலா Interview சென்ற காட்சிகள் இடம்பெற்றன. அடுத்த வாரத்திற்கான புரொமோவில், நிலா தான் இந்த இன்டர்வியூவில் செலக்ட் ஆகிவிட்டேன் என கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்த சோழன் அவரை Hug செய்ய சென்றார்.
ஆனால் நிலா அதற்கு மறுப்பு தெரிவிக்க இங்கு சென்னையில் நண்பர்கள் செய்துகொள்வது போல என கூற இருவரும் கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள். இதனால் சோழன் செம ஹேப்பி அண்ணாச்சி, இதோ கியூட் புரொமோ,