வேலை கிடைத்துவிடும் என சந்தோஷத்தில் இருந்த நிலாவுக்கு ஏற்பட்ட ஷாக், என்ன ஆனது.. அய்யனார் துணை புரொமோ
அய்யனார் துணை
அய்யனார் துணை, விஜய் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில புதுமுகங்களுடன் தொடங்கப்பட்டது.
ஆனால் இப்போது இந்த தொடர் நடிகர்கள் எல்லாருமே ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகிவிட்டனர். இப்போது கதையில் சேரன்-கார்த்திகா திருமண பரபரப்பு எபிசோட் முடிந்தது.
அடுத்து நிலா, சென்னையில் வேலை செய்ய வேண்டும் என்ற தனது கனவை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளார்.
புரொமோ
நிலா தனக்கு காலேஜ் சர்டிபிகேட் கிடைத்ததும் வேலைக்கு இன்டர்வியூ செல்ல ஆரம்பித்தார்.
அவர் ஒரு பெரிய ஐடி கம்பெனியில் 2, 3 ரவுண்டு இன்டர்வியூ சென்று தேர்வு ஆகியுள்ளார். இன்னும் ஒரே ஒரு மீடிங் தான் வேலை கிடைத்துவிடும் என செம சந்தோஷத்தில் உள்ளார்.
ஆனால் அந்த கம்பெனிக்கு யாரைப் பார்த்து பயந்து திருமணம் வேண்டாம் என ஓடி வந்தாரோ அவரே நிலா கண்முன் உட்கார்ந்திருக்கிறார். இதோ நிலா ஷாக் ஆன அய்யனார் துணை புரொமோ,