சந்தா அப்பா சொன்ன ஷாக்கிங் விஷயம், சேரன் செய்யப்போவது என்ன... அய்யனார் துணை சீரியல் புரொமோ

By Yathrika Jul 16, 2026 04:40 PM GMT
Report

அய்யனார் துணை

வீட்டில் அனைவரும் சம்பாதிக்கும் பணத்தை நிலாவிடம் கொடுத்து வீட்டு செலவு போக இருக்கும் பணத்தை சேமிக்கலாம், வீட்டிற்கு வேண்டியதை வாங்கலாம் என அண்ணன்-தம்பிகள், நிலா பேசி முடிவு செய்தார்கள்.

அதுபோல் எல்லோரும் பணம் கொடுக்க வீட்டிற்கு தேவையான செலவு போக ரூ. 35 ஆயிரம் மீதம் இருந்தது, அந்த பணத்தில் வீட்டிற்கு டிவி வாங்கலாம் என முடிவு செய்து கிளம்பினார்கள்.

சந்தா அப்பா சொன்ன ஷாக்கிங் விஷயம், சேரன் செய்யப்போவது என்ன... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai 16Th To 18Th July 2026 Promo

அந்த நேரம் நடேசன் கடன் வாங்கியவர்கள் வீட்டின் முன் வந்து பிரச்சனை செய்கிறார்கள், அடிதடி என ஆகிறது. அந்த நேரத்தில் பிரச்சனையை சமாளிக்க நிலா டிவி வாங்க வைத்திருந்த பணத்தை கடன் கேட்டவர்களிடம் கொடுக்க சொல்கிறார், சேரனும் கொடுத்துவிடுகிறார்.

சந்தா அப்பா சொன்ன ஷாக்கிங் விஷயம், சேரன் செய்யப்போவது என்ன... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai 16Th To 18Th July 2026 Promo

நாளைய எபிசோடின் புரொமோவில், வீட்டிற்கு வந்த நடேசனிடம் சேரன் கோபமாக பேசுகிறார். இது உங்கள் வீடு என எப்போதும் சொல்லுவீங்களே நீங்களே இங்கே இருந்துக்கோங்க, நாங்கள் எங்கேயாவது போகிறோம் என்கிறார்.

புரொமோ

கதையில் நடேசன் பிரச்சனை இப்போது ஓடிக் கொண்டிருக்க அடுத்த பிரச்சனைக்கான கதைக்களம் வந்துவிட்டது. அதாவது சந்தாவை சந்திக்க சேரன் இராமேஸ்வரம் செல்கிறார்.

சந்தா அப்பா சொன்ன ஷாக்கிங் விஷயம், சேரன் செய்யப்போவது என்ன... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai 16Th To 18Th July 2026 Promo

அந்த நேரம் சந்தா அப்பா வர சேரன் நீங்கள் சொன்னது போல் கண்டிப்பாக பணத்திற்கு ஏற்பாடு செய்துவிடுவேன் என்கிறார். ஆனால் சந்தா அப்பா என் பொண்ணுக்கும் உனக்கும் கண்டிப்பாக திருமணம் நடக்காது என கூற சேரன் செம ஷாக் ஆகிறார்.

இதோ புரொமோ,


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US