நிலாவின் அப்பா சோழனிடம் போட்ட சவால், குடும்பம் உடைந்துவிடுமா.. அய்யனார் துணை சீரியல் புரொமோ
அய்யனார் துணை
விஜய் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை.
இளசுகள் ரசித்து பார்க்கும் வண்ணம் கதை குடும்பம், காதல், அண்ணன்-தம்பிகள் பாசம் போன்றவற்றை உணர்த்தும் தொடராக உள்ளது.
இன்றைய எபிசோடில் கார்த்திகா மற்றும் அவரது கணவர் சேரன் வீட்டிற்கு விருந்து சாப்பிட்டு செல்கிறார்கள். பின் நிலா இன்டர்வியூ செல்கிறார், ஆனால் அங்கு அவருக்கு ஒரு ஷாக் உள்ளது, அது நாளைய எபிசோடில் தெரிய வரும்.
புரொமோ
இப்போது சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் நிலாவின் அப்பா எதர்சையாக சோழன் காரில் பயணம் செய்கிறார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட நிலா அப்பா இன்னும் ஒரு வாரத்தில் என் மகளை உன்னை விட்டு என் வீட்டிற்கு அழைத்து வருவேன் என சவால் விடுகிறார்.
இதோ புதிய புரொமோ,

மன்னிக்கவே முடியாது; உயிரிழந்தவரின் சகோதரர் திட்டவட்டம் - கேரள நர்சுக்கு மரண தண்டனை உறுதி? IBC Tamilnadu
