சோழனை விவாகரத்து செய்ய நினைத்த நிலா திடீரென எடுத்த முடிவு... அய்யனார் துணை புரொமோ
அய்யனார் துணை
அய்யனார் துணை, விஜய் தொலைக்காட்சியில் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் ஒரு சீரியல்.
எத்தனையோ அண்ணன்-தம்பிகள் கதை பார்த்திருக்கிறோம், ஆனால் இந்த சீரியல் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டதாக உள்ளது.

தனது தம்பி பாண்டியனின் திருமணம் தன்னால் தடைபடுகிறது என்பதை தாங்கிக் கொள்ள முடியாத சேரன் ஏதோ ஒரு பெண்ணை திருமணம் செய்யலாம் என முடிவு எடுக்க அது கடைசியில் நடக்காமல் போகிறது.
அந்த கதைக்களம் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது, இப்போது சேரன் லவ் டிராக் தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

புரொமோ
தற்போது அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில், சோழன் நாளைக்கு Court Hearing போகனும், மறந்துவிட்டீர்களா என கேட்கிறார்.

இல்ல போகவில்லை, கொஞ்சம் வேலை இருக்கிறது என கூறிவிட்டு தனது அறைக்கு செல்கிறார். உடனே சோழன், நிலா என்னை விரும்ப ஆரம்பித்துவிட்டார் என பாண்டியிடம் கூறி சந்தோஷப்படுகிறார்.