தாலியை கழற்றி கொடுத்த நிலா.. அதிர்ச்சியில் உறைந்த சோழன்! அய்யனார் துணை அடுத்த வார ப்ரோமோ
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக மாறி இருக்கிறது அய்யனார் துணை சீரியல்.
தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரோமோவில் நிலா தாலியை கழற்றி கொடுப்பது போல காட்டப்பட்டு இருக்கிறது.
ப்ரோமோ
வீட்டை விட்டு போனாலும் தாலியை இன்னும் கழற்றாமல் வைத்து இருக்கிறாயே என சோழன் நக்கலாக கேட்க, நிலா உடனே அந்த தாலியை கழற்றி அவரது கையில் கொடுத்து விடுகிறார்.
அதை சற்றும் எதிர்பார்க்காத சோழன் அதிர்ச்சியில் உறைகிறார். நிலா மீண்டும் வீட்டை விட்டு போய்விடுவார் ஏன் நினைத்தோம், ஆனால் நல்லவேளை கழற்றிக்கொடுத்துவிட்டார் என தம்பிகள் கூறுகிறார்கள்.
ஆனால் அது தனக்கு வலியை கொடுத்தது என்றும், நிலாவே வந்து அந்த தாலியை தனக்கு போடும்படி கூறும் அளவுக்கு செய்கிறேன் என சோழன் கூறுகிறார். நடக்குமா?