தனிக் குடுத்தனம் செல்ல வீடு காட்டிய சோழன், நிலா எடுக்கும் முடிவு?... அய்யனார் துணை சீரியல் புரொமோ

By Yathrika Jul 22, 2026 11:10 AM GMT
Report

அய்யனார் துணை

விஜய் டிவியின் ஹிட் சீரியலான அய்யனார் துணை சீரியலில் அடுத்தடுத்து ஒவ்வொரு பிரச்சனையாக வருகிறது.

ஜாலியாக வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தவர்களுக்கு நடேசன் ஷாக் கொடுத்தார், அடுத்து டிவி வாங்கலாம் என சந்தோஷமாக கிளம்பியவர்களுக்கு நடேசனால் கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்தார்கள்.

தனிக் குடுத்தனம் செல்ல வீடு காட்டிய சோழன், நிலா எடுக்கும் முடிவு?... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai 22Nd To 26Th July 2026 Promo

இன்னொரு பக்கம் சேரன் சந்தாவை பார்க்க இராமேஸ்வரம் செல்ல அங்கு அவரது அப்பா உங்களை வீட்டில் இருந்து அனுப்பவே திருமணம் செய்ய ஒப்புக்கொண்டேன், ஆனால் உங்களுடன் திருமணம் நடக்காது என கூறி ஷாக் கொடுத்தார்.

திடீரென வீட்டிற்கு வந்த மனோகர், என் மகளை இப்படியொரு வீட்டில் வைத்து பார்த்துக் கொள்வீர்களா என சோழனிடம் கேட்க அவர் வருத்தப்படுகிறார்.

தனிக் குடுத்தனம் செல்ல வீடு காட்டிய சோழன், நிலா எடுக்கும் முடிவு?... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai 22Nd To 26Th July 2026 Promo

புரொமோ

இப்போது வந்த புதிய புரொமோவில், சோழன் தனது அண்ணனிடம் நிலா அப்பா கேட்ட கேள்வி கஷ்டமாக இருந்ததாகவும், அதனால் நிலாவை அழைத்துக்கொண்டு வேறு வீட்டிற்கு செல்கிறேன் என கூறுகிறார்.

தனிக் குடுத்தனம் செல்ல வீடு காட்டிய சோழன், நிலா எடுக்கும் முடிவு?... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai 22Nd To 26Th July 2026 Promo

இதைக்கேட்டதும் சேரனுக்கு வருத்தம் என்றாலும் ஓகே என்கிறார். சோழன் நிலாவை அழைத்துக்கொண்டு தான் பார்த்து வைத்துள்ள வீட்டிற்கு சென்று தனியாக இங்கே நாம் வாழப் போகிறோம் என கூறுகிறார்.

அதைக்கேட்டதும் நிலா ஆடிப்போய் நிற்கிறார், அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US