சந்தாவால் சோழனுக்கு ஏற்பட்ட சோகம், இப்படி ஆகிடுச்சே... அய்யனார் துணை சீரியல் புரொமோ
அய்யனார் துணை
அய்யனார் துணை சீரியலில் கடந்த சில வாரங்களாக சேரன்-சந்தா திருமண கொண்டாட்ட காட்சிகள் தான் இடம்பெற்றன.
பல முறை தடைப்பட்ட சேரன் கல்யாணம் இந்த முறையாவது நடக்குமா என ரசிகர்கள் சந்தேகத்துடனே இருந்தார்கள், அதேபோல் சேரனின் தம்பிகளும் ஏதாவது தடை வந்துவிடுமோ என்ற பயத்திலேயே இருந்தார்கள்.

எப்படியோ திருமணம் முடிந்து வீட்டிற்கு வர இங்கும் நிலா அம்மா சந்தா அம்மாவால் பெரிய பிரச்சனையே வெடித்தது. இதனால் வீடு இரண்டாகும் என எதிர்ப்பார்க்கையில் எப்படியோ பிரச்சனைகளை வெடிக்காமல் தம்பிகள் பார்த்துக்கொண்டனர்.
புரொமோ
தற்போது அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோ வந்துள்ளது. அதில், சந்தா அதிகாலை 4 மணிக்கு எல்லாம் எழுந்து தெருவை சுத்தம் செய்து கோலம் போட்டு சாமி எல்லாம் கும்பிடுகிறார்.

அவர் அதிகாலை சாமி கும்பிடுவதை பார்த்து பாண்டி-பல்லவன் ஷாக் ஆகிறார்கள். பின் சந்தா, சேரனுக்காக எல்லாம் சமைத்து அவர் வேலைக்கு செல்ல வெளியே சென்று வழி அனுப்பி வைக்கிறார்.
அதனைப் பார்த்த சோழன், நிலாவிடம் என்னையும் அதுபோல் அனுப்பலாமே என கூற நிலா வேலை இருக்கிறது என அறைக்குள் செல்கிறார். சந்தா செய்ததை பார்த்து ஆசைப்பட்ட சோழனுக்கு கடைசியில் பல்பு தான் கிடைத்தது.