சோழனை வீட்டிற்கு அழைத்து வந்து மோசமாக அசிங்கப்படுத்தும் நிலாவின் அப்பா.. அய்யனார் துணை புரொமோ
அய்யனார் துணை
அய்யனார் துணை சீரியல், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களை போல இல்லாமல் இந்த கதை வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
நிலா-சோழன் கல்யாணத்தில் சூடு பிடிக்க தொடங்கிய இந்த கதை நன்றாக பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் கதையில் சேரன்-கார்த்திகா திருமண பரபரப்பு கதைக்களம் ஓடியது, கடைசியில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத திருமணம் தான் நடந்தது.

மனோஜை கட்டிப்போட்டு ரூமில் அடைத்த குடும்பம், கதறும் ரோஹினி.. இது தேவையா, சிறகடிக்க ஆசை கலகலப்பு எபிசோட்
புரொமோ
சோழன் தேவையில்லாமல் நிலா அப்பாவிடம் சவால் விட இப்போது அந்த கதைக்களம் தான் ஒளிபரப்பாகி வருகிறது.
நிலா அப்பா கூறியது போல் தனது மகளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார், உடன் சோழனும் வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்த சோழனை நிலா அப்பா மற்றும் அண்ணன் அசிங்கப்படுத்துகிறார்கள், ஆனால் நிலாவிற்கு அவர்கள் செய்வது தெரிய கூடாது என்பதில் மட்டும் தெளிவாக உள்ளார்கள். இதோ புரொமோ,