பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ
அய்யனார் துணை
குடும்பம், காதல், அண்ணன்-தம்பி பாசம், மாமனார்-மருமகள் உறவு என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக காட்டி அருமையான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை.
கதையில் அண்மையில் பொங்கல் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்து முடிந்தது. கொண்டாட்டத்திற்கு இடையில் வானதி வீட்டிற்கு வந்து தனது அம்மா-அப்பா திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்கள் என்ற சந்தோஷ செய்தியையும் கூறியிருந்தார்.

இதற்கு இடையில் ராகவ், நிலாவிற்கு பொங்கல் வாழ்த்து கூறி மெசேஜ் அனுப்ப அதைப்பார்த்து சோழன் செம கோபமாகி அசிங்க அசிங்கமாக பதில் அனுப்பிவிட்டார். நிலாவிற்கு அது தெரியக் கூடாது என மெசேஜை நீக்கி இருந்தார்.
ஆனால் இன்றைய எபிசோடில் ராகவ் நிலாவிடம் மெசேஜ் குறித்த கோபமாக திட்டி அனுப்பியுள்ளார்.

புரொமோ
தற்போது வந்துள்ள புதிய புரொமோவில், பாண்டியிடம் திருமணம் ஏன் வேண்டாம் என்கிறாய் என சேரன் கேட்கிறார். அவரோ வானதி வீட்டிற்கே சென்று திருமணம் இப்போது வேண்டாம் என கூறியதை காட்டுகிறார்கள்.

இன்னொரு பக்கம் நிலா முதலில் பாண்டி-வானதிக்கு திருமணம் நடக்கட்டும், பின் உங்களுக்கு திருமணம் நடந்தால் சந்தா வீட்டிற்கு வந்துவிடுவார்கள். அதன்பின் இவருக்கும் இந்த வீட்டிற்கும் பெரிய கும்பிடு போட்டுவிட்டு நான் கிளம்புகிறேன் என கூறுவதை காட்டுகிறார்கள்.
இந்த பரபரப்பான புரொமோ இதோ,