பாண்டி எனக்கு வேண்டாம், திருமணமே வேண்டாம் என அதிரடி முடிவு எடுத்த வானதி... அய்யனார் துணை சீரியல்

By Yathrika Apr 28, 2026 05:00 AM GMT
Report

அய்யனார் துணை

விஜய் டிவியில் ரசிகர்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை. 

4 அண்ணன்-தம்பிகளின் கதை என்றாலும் வழக்கமான கதையாக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. கதையே இல்லாமல் ஓட்டுவது, ஒரு திருமணத்தை இழு இழு என இழுப்பது போன்ற எந்த விஷயங்களும் இந்த சீரியலில் கிடையாது.

குடும்பம், சென்டிமென்ட், காதல், காமெடி, அண்ணன்-தம்பி பாசம் என எல்லா எமோஷனும் இந்த சீரியலில் உள்ளது.

பாண்டி எனக்கு வேண்டாம், திருமணமே வேண்டாம் என அதிரடி முடிவு எடுத்த வானதி... அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai 27Th April To 2Nd May 2026 Promo

புரொமோ

இப்போது கதையில், சந்தாவை பார்ப்பதற்காக அவரது ஊருக்கு சேரன், சோழன், நிலா எல்லாம் செல்கிறார்கள். அவரது அம்மா-அப்பாவை சந்தித்து பேச அவர்களே உங்களிடம் பணம், சொத்த இல்லை என கூறுகிறார்.

இதனால் சோழன், ஒரு 6 மாதம் டைம் கொடுங்கள் நாங்கள் ரூ. 25 லட்சம் பணம், நகையோடு வருகிறோம் என்கிறார். 

பாண்டி எனக்கு வேண்டாம், திருமணமே வேண்டாம் என அதிரடி முடிவு எடுத்த வானதி... அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai 27Th April To 2Nd May 2026 Promo

இதற்கு இடையில் அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வானதி எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்கள் என கூற பாண்டி தான் அண்ணனுக்கு முதலில் திருமணம் ஆக வேண்டும் என்றானே என அவரது அம்மா கூறுகிறார்.

பாண்டி எனக்கு வேண்டாம், திருமணமே வேண்டாம் என அதிரடி முடிவு எடுத்த வானதி... அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai 27Th April To 2Nd May 2026 Promo

உடனே வானதி எனக்கு பாண்டி வேண்டாம், வேறு மாப்பிள்ளை பாருங்கள் என்கிறார். இந்த விஷயத்தை வானதி அண்ணன் பாண்டியிடம் கூற இருவருக்கும் சண்டை வருகிறது.

எனது அண்ணனை ஏன் அடித்தாய், அவன் சொன்னது உண்மை தான். என்னை டார்ச்சர் என்று சொன்னதும் உன் பின்னாலேயே நான் வருவேனா என கோபப்படுகிறார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US