சந்தோஷமாக இருந்த சோழனிடம் நிலா சொன்ன விஷயம், செம ஷாக்... அய்யனார் துணை சீரியல் புரொமோ

By Yathrika Mar 29, 2026 07:01 AM GMT
Report

அய்யனார் துணை

குடும்பம், கலாட்டா, கொஞ்சம் சண்டை, நிறைய பாசம் என அழகிய குடும்பமாக உள்ளது அய்யனார் துணை.

சீரியல்களுக்கே உரிய ஸ்டைலில் இல்லாமல் இந்த சீரியலின் கதைக்களம் மாறுபட்டு உள்ளது, அதாவது ரசிகர்கள் அட இது என்ன சீரியல்டா என புலம்பாமல் இப்படி தான் இருக்க வேண்டும் என குட் மார்க் போடும் அளவிற்கு கதை உள்ளது.

சந்தோஷமாக இருந்த சோழனிடம் நிலா சொன்ன விஷயம், செம ஷாக்... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai 30Th March To 4Th April Promo

முதலில் பல்லவன் பிரச்சனை அது உடனே முடிய அடுத்த சோழன் பிரச்சனை. அதுவும் நிலா உதவியுடன் முடிய உடனே சேரனுக்கு பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. சந்தாவை தேடி அவரது உறவினர்கள் சென்னை வர இப்போது வானதி சந்தாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்று மாஸான விஷயம் செய்துவிட்டார்.

சந்தோஷமாக இருந்த சோழனிடம் நிலா சொன்ன விஷயம், செம ஷாக்... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai 30Th March To 4Th April Promo

புரொமோ

இதற்கு இடையில் சேரன் மாப்பிள்ளை கெட்டப்பில் கோவிலில் இருக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்தது. தற்போது இந்த வாரத்திற்கான புதிய புரொமோ வெளியாகியுள்ளது.

சந்தோஷமாக இருந்த சோழனிடம் நிலா சொன்ன விஷயம், செம ஷாக்... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai 30Th March To 4Th April Promo

அதில், சோழன்-நிலா இருவரும் கடற்கரை செல்கிறார்கள், அங்கு தண்ணீரில் விளையாடுகிறார். பின் நிலா, சோழனிடம் நீங்கள் பெரிய ஆளாக வரனும், பெரியதாக சாதனை செய்யனும், வண்டியை மட்டுமே ஓட்டு நீங்கள் காலத்தை ஓட்ட கூடாது என கூறுகிறார்.

சந்தோஷமாக இருந்த சோழனிடம் நிலா சொன்ன விஷயம், செம ஷாக்... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai 30Th March To 4Th April Promo

உடனே சோழன், என்னை விட்டு போக போறீங்களா, திடீர்னு நிறைய அட்வைஸ் கொடுக்கிறீர்கள், அதான் என்னை விட்டு போக போறீங்களோ என்று பயம் வருவதாக கூறுகிறார்.

அதற்கு நிலா, எனக்காக நீங்கள் நிறைய கஷ்டப்பட்டுள்ளீர்கள், ஆனால் நான் உங்களுக்காக எதையும் செய்யவில்லை, உங்களுக்காக நான் என்ன செய்யட்டும் என கேட்கிறார். நீங்கள் என்னுடன் இருப்பதே பெரிய உதவி தான் என்கிறார் சோழன்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US