அண்ணியை தெரியாமல் அசிங்கமாக திட்டிய பாண்டியன், பிறகு... அய்யனார் துணை கியூட் புரொமோ

Yathrika
in தொலைக்காட்சிReport this article
விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் முடிவுக்கு வந்த தொடர் என்றால் அது பனிவிழும் மலர்வனம்.
இந்த தொடர் ஆரம்பித்தமும் தெரியவில்லை, முடிந்தது தெரியவில்லை. காரணம் தொடருக்கு சரியான வரவேற்பும் இல்லை. புரொமோ இந்த தொடர் முடிய சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் அய்யனார் துணை என்ற தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
4 மகன்களுடன் வாழும் அப்பா அவர்களின் வாழ்க்கை எதிர்ப்பாராத சூழ்நிலையால் திருமணம் செய்துவரும் பெண் என்பது தான் புரொமோவாக ஒளிபரப்பாகி வந்தது.
தற்போது தொடர் ஆரம்பிக்கப்பட்டு ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைய எபிசோடில்
நிலா, சோழனை எழுப்ப சென்று தண்ணீர் பாண்டியன் மீது கொட்டிவிட்டது. இதனால் அவர் கண்டபடி தவறாக வார்த்தைகள் திட்டிவிடுகிறார்.
இதனால் வீட்டைவிட்டு ஓடியவர் மீண்டும் தனது அண்ணியை கண்டதும் அவரின் முகத்தை பார்க்க முடியாமல் தலைதெறிக்க ஓடுகிறார். இதோ அழகான புரொமோ,