நிலாவிற்கு சோழன் மேல் வந்ததே காதல், அவரது அட்ராசிட்டியை பாருங்க... அய்யனார் துணை கலகலப்பான புரொமோ
அய்யனார் துணை
அய்யனார் துணை, நாளுக்கு நாள் சீரியல் ரசிகர்களை கட்டிப்போடும் ஒரு தொடர்.
2025ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களாக வந்து கொண்டிருக்கிறது. அண்ணன்-தம்பிகளின் கதை என்றாலும் கொஞ்சம் வித்தியாசமாக அமைய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொடராக அமைந்துவிட்டது.

இதில் சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் மற்றும் நடேசன் ஆகியோர் சிறப்பான நடிப்பையும் அதாவது அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துகொண்டு வருகிறார்கள்.
கடந்த எபிசோடுகளில், நடேசன் குடும்பத்தினர் முதன்முறையாக குல தெய்வ கோவிலுக்கு சென்ற எபிசோடுகள் தான் இடம்பெற்றன.

புரொமோ
இந்த வாரத்திற்கான எபிசோட் புரொமோவில், பல்லவன் பஸ் ஸ்டாண்டில் பார்த்த பெண்ணிடம் முதன்முறையாக பேசுகிறார், அப்போது அவர் ஷாக்கிங் விஷயம் ஒன்றை கூறகிறார்.

அதாவது அந்த பெண்ணிற்கு பல்லவனை பிடிக்கவில்லையாம், சோழனை தான் பிடித்துள்ளதாம். இதனை அவர் வீட்டில் கூற நிலா கோபப்படுகிறார், ஆனால் சோழன் என்ஜாய் செய்கிறார்.
பின் பஸ் ஸ்டான்டில் சோழன் அந்த பெண்ணிடம் போய் பேச அதைப்பார்த்த நிலா செம கோபப்படுகிறார். இதனை பார்க்கும் போது நிலாவிற்கு, சோழன் மேல் காதல் வந்துவிட்டதாக தெரிகிறது.
இதோ செம கலகலப்பான இந்த வார புரொமோ,
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan