திடீரென மோசமான முடிவு எடுத்த நிலா, கடும் ஷாக்கில் சோழன்... அய்யனார் துணை சீரியல் புரொமோ
அய்யனார் துணை
எந்த தொலைக்காட்சி சீரியல் எடுத்தாலும் திருமணம் என்றாலே பிரச்சனையாக தான் உள்ளது. இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலிலும் திருமணம் என்றாலே பிரச்சனையாக செல்கிறது.
சோழன் சவாரி சென்ற இடத்தில் எதிர்ப்பாரா பிரச்சனையில் சிக்கி அதனால் திருமணம் நடந்தது. அடுத்து சேரனுக்கு திருமணம் நடக்குமா என்று பார்த்தால் கார்த்திகாவுடனும் நடக்கவில்லை, சந்தாவுடனும் நடக்கவில்லை.

அடுத்து பாண்டி-வானதி ஒன்று சேர்வார்கள் என்று பார்த்தால் இப்போது அவர்களின் திருமணத்திலும் சிக்கல் வந்துவிட்டது.
புரொமோ
வானதிக்கு தன்னை பாண்டி மட்டும் இல்லாமல் அவரது குடும்பமே கிண்டலடித்து சிரித்தது மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வானதி தனது வீட்டில் பாண்டி வேண்டாம் எனக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் ஏற்பாடு செய்யுங்கள் என தனது குடும்பத்திடம் கூறிவிட்டார்.
இந்த விஷயம் அறிந்த சோழன்-நிலா, வானதியிடம் பேசிப்பார்க்க அதுவும் கடைசியில் பிரச்சனையில் முடிந்தது.
தற்போது அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில், சேரன் நிலாவிடம், சோழனிடம் நீ சேர்ந்து வாழனும், விவாகரத்து வேண்டாம் என சொல்ல சொல்கிறார். நிலாவும் சோழனுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக சேரனிடம் கூறுகிறார்.
ஆனால் நீதிமன்றத்திற்கு வந்த நிலா திடீரென தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்கிறார், அவர் கூறியதை கேட்டு சோழன் செம ஷாக் ஆகிறார்.

வீட்டில் விவாகரத்து வேண்டாம் என கூறிவிட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டும் என நிலா ஏன் கூறினார் அதற்குள் என்ன ஆனது என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் காண்போம்.