சென்னைக்கு திரும்பிய நிலா, சோழனுக்காக அவர் செய்த செயல்... அய்யனார் துணை புரொமோ
அய்யனார் துணை
கொஞ்சம் வித்தியாசம் காட்டுங்கப்பா, சீரியல்கள் ஒரே மாதிரி இருக்கு என புலம்பி வரும் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த தொடர் தான் அய்யனார் துணை.
விஜய் டிவியில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது தொடரின் கதை பரபரப்பின் உச்சமாக செல்கிறது.
புரொமோ
மனோகர், சோழனிடம் போட்ட சவாலில் ஜெயிக்க தனது மகள் நிலாவை வீட்டிற்கு அழைத்து வந்திருப்பது, அவர் கணவர் மீது அப்பா மற்றும் அண்ணன் திருட்டு பழி போட்ட விஷயமும் நிலாவிற்கு இன்று தெரிய வருகிறது.
இதனால் கோபத்தில் நிலா தனது குடும்பத்தினரை திட்டிவிட்டு இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.
பின் வந்த புதிய புரொமோவில், சென்னை வந்த சோழன் நிலா அப்பா கொடுத்த நகையில் இருந்து இரண்டு காயின்களை எடுத்து வந்ததை காட்டுகிறார்.
அதனைக் கண்ட சேரன் என்ன பழக்கம் இது என திட்ட நிலா விடுங்கள் என்கிறார். பின் நிலா நானும் ஒன்று கொண்டு வந்துள்ளேன் என கூறி சோழனின் ஆதார், ஓட்டர் ஐடி என எல்லாவற்றையும் காண்பிக்கிறார். அதனைப் பார்த்து சோழன் சந்தோஷப்படுகிறார்.

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
