வீட்டிற்கு வந்த சேரனை ஓங்கி அடிச்ச நடேசன், பின் அவர் சொன்ன விஷயம்... அய்யனார் துணை புதிய புரொமோ
அய்யனார் துணை
அய்யனார் துணை, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் சீரியல்.
இந்த தொடர் கடந்த வார டிஆர்பியில் நம்பர் 1ம் இடத்தை பிடித்து ரசிகர்களின் பேவரெட் தொடராக மாறிவிட்டது.
டிஆர்பியில் நம்பர் 1 வந்ததை சீரியல் குழுவினர் தங்களது இன்ஸ்டாவில் பதிவிட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
புரொமோ
இப்போது கதையில் சேரன், ஜோதியர் சொன்னதை உண்மையாக எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
நான் வெளியே சென்றால் தம்பிகளின் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என நினைத்தவர் தன்னுடன் வேலை செய்பவரின் வீட்டிற்கு சென்றுவிடுகிறார்.
இங்கு வீட்டில் நடேசன், சோழன், பாண்டியன், பல்லவன் என அனைவருமே சேரனை தேடி அலைகிறார்கள். இன்றைய எபிசோடில் சோழன் சேரனை பார்த்துவிடுகிறார். தற்போது வந்துள்ள புதிய புரொமோவில், வீட்டிற்கு வந்த சேரனை ஓங்கி அடிக்கிறார் நடேசன்.
பின் நான் என் மனைவிகளை கொன்றுவிட்டேன் என என்னை யார் யார் எவ்வளவு அசிங்கப்படுத்துகிறார்கள் நான் இங்கு இல்லை, ஏதோ ஒரு ஜோசியர் சொன்னான் என்று இவர் வீட்டைவிட்டு கிளம்பிவிட்டார் என கோபமாக திட்டிவிட்டு செல்கிறார்.