அய்யனார் துணை சீரியல் நடிகருக்கும் நடிகைக்கும் திருமணம்.. வெளிவந்த அழகிய ஜோடியின் புகைப்படம்
அய்யனார் துணை
தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. விஜய் தொலைக்காட்சியில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் தற்போது விஜய் டிவியில் நம்பர் 1 சீரியலாகவும் அய்யனார் துணைதான் உள்ளது.

இந்த சீரியலில் நிலாவை கடுப்பேற்றுவதற்காக சோழன் காயத்ரி என்கிற பெண்ணை காதலிப்பது போல் நடித்தார். ஆனால், அதுவே அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக வந்தது.
பின், நிலா காயத்ரியிடம் பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார். இதன்பின், சோழன் நேரில் சென்று காயத்ரியிடம் மன்னிப்பு கேட்டார்.
திருமணம்
இந்த நிலையில், காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஆயிஷாவுக்கு அதே சீரியலில் நடிக்கும் நடிகர் சல்மானுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் திருமணம் நடக்கவுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை இந்த ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள்.
இதோ பாருங்க..
