புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர்... எந்த தொடர் தெரியுமா?
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது
4 சகோதரர்களின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பானாலும் வித்தியாசமான கதைக்களம் கொண்டு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வார கதைக்களத்தில் சோழன்-நிலா இருவரும் சந்தா வீட்டிற்கு சென்று சேரனுக்காக பெண் கேட்டு வருகிறார்கள்.
சந்தா அண்ணன் இதுகுறித்து சேரனிடம் கூற அவரோ இப்போதைக்கு திருமணம் வேண்டாம். சோழன்-நிலா இருவரும் சேரவில்லை, அதுவரை பொறுத்திருக்க விரும்புகிறேன் என கூற சந்தா வருத்தத்துடன் பாரக்கிறார்.

புதிய தொடர்
இந்த அய்யனார் துணை சீரியலில் ரசிகர்களுக்கு பிடிக்காத ஒரு கதாபாத்திரமாக நடிப்பவர் தான் ராகவ். அவர் நல்ல நடிகர் என்றாலும் அவரது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது என்ன தகவல் என்றால் ராகவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் விகாஸ் சம்பத் விஜய் டிவியிலேயே புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார். புதியதாக தொடங்கப்பட்டுள்ள சுட்டும் விழி சுடரே சீரியலில் தான் நடிக்க உள்ளாராம்.
ஆனால் என்ன கதாபாத்திரம் என தெரியவில்லை, சில தினங்களில் அவரது என்ட்ரி வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
