கார்த்திகாவிற்கு பதிலாக சேரனுக்கு வரப்போகும் ஜோடி, வில்லியா... அய்யனார் துணை அடுத்த கதைக்களம்
அய்யனார் துணை
சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் இந்த 4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் அய்யனார் துணை.
கடந்த சில எபிசோடுகளில் நிலா இன்டர்வியூ சென்ற காட்சிகளும், கார்த்திகா-சேரன் எமோஷ்னல் காட்சிகளும் வந்தன.
கடைசியாக கார்த்திகாவிற்கு அவரது அம்மா-அப்பா பார்த்தவருடன் திருமணமும் நடந்து முடிகிறது.
அடுத்த கதைக்களம்
இனி கதையில் என்ன வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க அய்யனார் துணை சீரியல் பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது, சேரன் கார்த்திகாவை தான் திருமணம் செய்வார், சூப்பர் ஜோடி என ரசிகர்கள் கொண்டாடினார்கள், ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
சேரனுக்கு அவரது நண்பரின் தங்கை தான் ஜோடி என்றும் அவர் கதையில் வில்லியாக வருவார் என கூறப்படுகிறது.
அவர் வீட்டிற்குள் வந்து அண்ணன்-தம்பிகளை தாண்டி நிலாவிற்கும் தனது வில்லத்தனத்தை காட்டுவார் என கதை குறித்து ஒரு தகவல் வலம் வருகிறது.