நிலா அறைக்கு சென்று சோழன் செய்த மோசமான காரியம், சங்கடமான தருணம்... அய்யனார் துணை புரொமோ
அய்யனார் துணை
விஜய் டிவியில் இந்த வருடம் ஒளிபரப்பாக தொடங்கிய தொடர்களில் ஒன்று அய்யனார் துணை.
அண்ணன்-தம்பிகள் வாழும் ஒரு வீட்டில் எதர்சையாக ஒரு பெண் ஒருவரை திருமணம் செய்து வீட்டிற்கு வருகிறார். இதனால் அந்த வீட்டின் அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கையே மாறுகிறது.
இந்த கதை ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்து போக பெரிய வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
புரொமோ
இந்த வார கதையில் சோழன் சரியாக கார் ஓட்டாததால் அவர் கைதாகிறது.
பின் குடும்பத்தினர் அவரை போலீஸ் நிலையத்தில் பணம் கொடுத்து எப்படியோ அழைத்து வந்துவிடுகிறார்கள். பின் வீட்டில் சோழனுக்கும் பாண்டியனுக்கும் சண்டை நடக்க நிலா தடுத்து நிறுத்துகிறார்.
அதன்பின் சோழன் ஆசையாக நிலாவிற்கு ஸ்கூடி வாங்கி கொடுக்க நிலா அவரை மேலும் மேலும் கஷ்டப்படுத்துகிறார். அடுத்த வார புரொமோவில், குடித்துவிட்டு வந்த சோழன் நிலா அறைக்கு சென்று அவர் பெட்டில் படுக்கிறார்.
நிலாவிடம் நான் உன் புருஷன் தானே நான் என் வெளியே படுக்க வேண்டும் என கூறுகிறார்.