திருவண்ணாமலை அழைத்து செல்ல பிளான் போடும் அப்பா, ஷாக் ஆகி நிலா செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ
அய்யனார் துணை
பெற்றோர்கள் என்றால் தங்களது குழந்தைகளின் ஆசையை அறிந்து நடப்பவர்கள் என்று கூறலாம்.
ஆனால் விஜய் தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, சிந்து பைரவி போன்ற தொடர்களில் பெற்றோர்கள் கொஞ்சம் வித்தியாசமாகவே உள்ளனர்.
இப்போது அய்யனார் துணை சீரியலில், நிலா சோழனை விவாகரத்து செய்த விஷயம் அறிந்து அவரது பெற்றோர் சென்னையிலேயே ஒரு புதிய வீட்டிற்கு தங்களது மகளை அழைத்துச் செல்கின்றனர்.

ஆரம்பத்தில் இருந்தே அவரை திருவண்ணாமலை அழைத்துச் செல்லும் பிளானிலேயே உள்ளனர். சோழன், நடேசன், பல்லவன், பாண்டி என ஒவ்வொருவரும் நிலாவை வீட்டிற்கு வந்து சந்தித்த வண்ணம் உள்ளனர்.

எபிசோட்
இன்றைய எபிசோட் புரொமோவில், சேரனிடம், நிலாவிற்கு சோழனிற்கும் என்ன பிரச்சனை ஏன் விவாகரத்து வாங்கினார்கள் என கேட்கிறார்.
உடனே சேரன் நடந்த விஷயத்தை எல்லாம் கூற நிலா அப்பா அப்போது தனது மகள் காதலித்து ஓடிப்போகவில்லை, சூழ்நிலையால் தான் சோழனை திருமணம் செய்தார் என சந்தோஷப்படுகிறார்.

இந்த விஷயத்தை பிடித்து அப்படியே நிலாவை திருவண்ணாமலை அழைத்துச்செல்ல பிளான் போடுகிறார். நிலா அம்மா-அப்பா, மகளை திருவண்ணாமலை அழைத்து செல்லலாம் என பேசுகின்றனர்.

அவரது அம்மா வரவில்லை என்று நிலா கூறினாள் என்ன செய்வது என கேட்க அதற்கு அவர், புடிச்சி தரதரவென இழுத்துக்கொண்டு செல்வோம் என்கிறார். அதைக்கேட்ட நிலா பயந்து சோழனுக்கு போன் செய்து என்னை அழைத்துச் செல்லுங்கள் என்கிறார்.
இதோ புரொமோ,
முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த சிம்ரன்... அடுத்தடுத்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி IBC Tamilnadu
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu