சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ
அய்யனார் துணை
தமிழ் சின்னத்திரையில் இப்போது ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் அழுவதும், பழி வாங்குவதுமான கதைக்களங்களாக அமைந்து வருகிறது.
ஆனால் அதுபோன்ற கதைக்களத்தில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு அதிகம் கலகலப்பாக செல்லும் ஒரு தொடராக உள்ளது அய்யனார் துணை.
இப்போது கதையில் சேரனை பார்க்க வந்த பெண் வீட்டார் அவர் இருந்தால் அந்த உள்ள யாருக்கும் நல்லது நடக்காது என கூறியதால் அவர் தம்பிகளின் வாழ்க்கையை நினைத்து கடிதம் எழுதிவிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்துவிடுகிறார்.
அவரின் கடிதத்தை பார்த்து பயந்து அனைவரும் சோகத்துடன் அவரை தேடுகிறார்கள்.
புரொமோ
அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோவில், பாண்டியன், பல்லவன், சோழன் 3 பேரும் எங்கெங்கோ சென்று சேரனை தேடுகிறார்கள்.
ஒருகட்டத்தில் நிலா போலீஸில் கம்ப்ளைன்ட் எழுதி கொடுக்கலாம் என கூற சோழனும் ஒப்புக்கொள்கிறார். அங்கு சோழன் கதறி கதறி அழ நிலா சமாதானப்படுத்துகிறார்.
இப்படி தம்பிகள் சேரனை தேடி அலைய அவரோ தன்னுடைய வேலை செய்யும் நண்பன் வீட்டில் இருப்பதை கண்டு சோழன் கோபப்படுகிறார். இதோ புரொமோ,