புதிய கார் வாங்கியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர் பாண்டியன்... மனைவியுடன் வெளியிட்ட வீடியோ இதோ
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட தொடர்களில் ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது அய்யனார் துணை சீரியல்.
4 அண்ணன்-தம்பிகளின் கதை என்றாலும் கொஞ்சம் பார்ப்பதற்கு வித்தியாசமாக ஜாலியாகவே உள்ளது. எப்போதும் பழிவாங்குவது, அடித்துக்கொள்வது, சண்டை இதுபோன்ற சீரியல்களே அதிகம் வரும் நேரத்தில் பாசத்தை உணர்த்தும் ஒரு தொடராக உள்ளது.
இப்போது கதையில் சேரன்-சந்தா காதல் கதை தான் ஓடுகிறது, ஆனால் நடேசன் வட நாட்டுப்பெண் வேண்டாம் என கோபமாக சொல்கிறார். சேரன் திருமண கதைக்களம் வரும்போது நடேசன் பற்றிய பிளாஷ் பேக் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதிய கார்
இந்த தொடரில் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் விஜே அருண் கார்த்தி.

இவர் பெயர் என்னவேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் மக்கள் இவரை பாண்டியனாக தான் கொண்டாடுகிறார்கள். இவர் சில மாதங்களுக்கு முன் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அந்த விஷயத்தை இப்போது தனது மனைவியுடன் பகிர்ந்துள்ளார், அவருக்கு ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.