அது இல்லாமல் நான் தாலி கட்ட மாட்டேன்... அய்யனார் துணை சீரியல் நடிகர் அரவிந்த் திருமணத்தில் செய்த காரியம்...
அய்யனார் துணை
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த தொடரில் நடிக்கும் அனைவருமே ரசிகர்களை கவர்ந்துவிட்டார்கள். அதிலும் சோழனாக நடிக்கும் அரவிந்திற்கு அவரின் நடிப்பிற்கு ரசிகர்கள் அடிமையாகிவிட்டனர்.
சீரியலின் இந்த வார புரொமோவில் சோழனின் அட்ராசிட்டி காட்சிகளை காண எல்லோரும் ஆவலாக உள்ளனர்.

திருமணம்
தற்போது சோழனாக நடித்து அசத்திய நடிகர் அரவிந்த் திருமணத்தில் ஒரு விஷயம் செய்துள்ளார்.
அவரது அம்மா-அப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர், அவர்கள் இல்லாமல் திருமணம் நடக்கிறது. கூடவே தான் இல்லை போட்டோவிலாவது இருக்க வேண்டும் என ஒரு புகைப்படம் ஏற்பாடு செய்துள்ளார்.

ஆனால் திருமணத்திற்கு 10 நிமிடம் முன்பு வரை புகைப்படம் வரவில்லையாம், இதனால் போட்டோ வந்தால் தாலி கட்டுகிறேன் என கூறியிருக்கிறார்.
பின் எப்படியோ கடைசியில் அரவிந்த் அம்மா-அப்பா போட்டோ வர திருமணமும் நடந்து முடிந்துள்ளது. இதனை ஒரு விருது விழா மேடையில் அரவிந்த் மனைவி சங்கீதா கூறியுள்ளார்.

Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan