படப்பிடிப்பை தாண்டி ஜாலி டூர் சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர்கள்... வீடியோ பாருங்க
அய்யனார் துணை
அய்யனார் துணை, செம ஜோராக ரசிகர்களின் பேராதரவில் ஒளிபரப்பாகும் தொடர்.
இப்போது கதையில் நிலாவை வெறுப்பேற்ற சோழன், பஸ் ஸ்டான்டில் பார்த்த காயத்ரி என்ற பெண்ணிடம் நெருக்கமாக பேசுவது போல் நாடகம் ஆடி வந்தார். ஆனால் அந்த பெண், சோழனை நிஜமாகவே காதலித்தது போல் தெரிகிறது.

இப்போது சோழன் இல்லை என்றதும் அந்த காயத்ரி என்ற பெண் நண்பர்கள் வீட்டிற்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு அழுதுகொண்டே இருக்கிறார். அவரை சமாதானப்படுத்த நிலா அவரின் வீட்டிற்கு பல்லவனுடன் சென்றுள்ளார்.
அடுத்து இந்த பிரச்சனை எப்படி முடிவுக்கு வரும் என தெரியவில்லை.
வீடியோ
சீரியலில் கதை ஜோராக சென்று கொண்டிருக்க இதில் நடிக்கும் நடிகர்கள் இப்போது சுற்றுலா சென்றுள்ளனர். நிலா, பல்லவன், சேரன், வானதி, பாண்டியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் தான் சென்றுள்ளனர்.

அங்கு எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை மதுமிதா தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.