அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ
அய்யனார் துணை
பரபரப்பான கதைக்களத்துடன் அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்களை புலம்ப வைக்கும் கதைக்களமாக அய்யனார் துணை சீரியல் இருக்கிறது.
தன்னை ஏமாற்றி தான் சோழன் திருமணம் செய்துகொண்டார் என்ற உண்மையை அறிந்து உடைந்துபோன நிலா வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். பல்லவன் நிலாவுடன் பஸ் ஸ்டாண்டு வரை வந்தார், அதன்பின் அவர் வீட்டிற்கு வந்துவிட்டார்.

நிலா என்ன செய்வது என்ற சோகத்தில் கோவிலில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறார்.
வீட்டில் சேரன், சோழனை கடுமையாக திட்ட அவர் நான் தான் தவறு நான் வீட்டைவிட்டு செல்கிறேன் என அவரும் வெளியே கிளம்பிவிடுகிறார். அடுத்து நிலா எங்கே செல்வார், சோழன் செய்யப்போவது என்ன, இருவரும் சேர்வார்களா என நிறைய கேள்வி எழுந்து வருகின்றன.
வீடியோ
கதைக்களம் மிகவும் பரபரப்பாக செல்ல இதற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சூப்பரான வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது படப்பிடிப்பு தளத்தில் சாப்பிடாமல் இருந்தால் பசிப்பதும், சாப்பிட்டால் தூக்கம் வருவதுமாக உள்ளது.

Summerல படப்பிடிப்பு பண்ண முடியாம, என்ன தான் பண்றது என புலம்புகிறார்.
இதோ அந்த கலகலப்பான வீடியோ,