நாளுக்கு நாள் நெருக்கமாகும் நிலா-சோழன் ஜோடி, அட்டகாசமான எபிசோட்... அய்யனார் துணை சீரியல்

Report

அய்யனார் துணை

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் அய்யனார் துணை சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இப்போது கதையில் சேரன்-சந்தா காதல் கதை பற்றிய பரபரப்பான காட்சிகள் தான் ஒளிபரப்பாகியுள்ளது. சந்தா உறவினர்கள் வந்தபோது எப்படியோ வானதி காப்பாற்றி அவரை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார்.

நேற்றைய எபிசோடில், வானதி சந்தாவை அழைத்துக்கொண்டு சேரன் வீட்டிற்கு வந்துவிட்டார்.

நாளுக்கு நாள் நெருக்கமாகும் நிலா-சோழன் ஜோடி, அட்டகாசமான எபிசோட்... அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai Serial April 01 Episode Storyline

எபிசோட்

ட்ரிப் முடிந்து சோழன்-நிலா சென்னை வந்துவிட்டனர். சவாரிக்கு வந்த தாத்தா-பாட்டி இருவரும் சோழன் மற்றும் அவரது மனைவியை வீட்டிற்குள் அழைத்து காபி கொடுக்கிறார்கள்.

பின் பாட்டி தட்டில் குங்குமம், பூ எல்லாம் எடுத்துவிட்டு இருவரையும் ஆசீர்வாதம் செய்து நிலாவிற்கு குங்குமம் வைத்து பூ வைத்து விடுகிறார். இருவரும் சீக்கிரம் குட் நியூஸ் சொல்ல வேண்டும் என கூறுகிறார்.

நாளுக்கு நாள் நெருக்கமாகும் நிலா-சோழன் ஜோடி, அட்டகாசமான எபிசோட்... அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai Serial April 01 Episode Storyline

வீட்டிற்கு செல்லும் வழியில் நிலா கடற்கரை செல்லலாமா என கேட்க சோழன் வண்டியை திருப்புகிறார். இருவரும் பீச் சென்று கடல் அழகை ரசிக்கிறார்கள். வீட்டிற்கு அனீஸ் வர அவரை அழைத்து நடேசன் நடந்த விஷயத்தை எல்லாம் கேட்கிறார்.

நாளுக்கு நாள் நெருக்கமாகும் நிலா-சோழன் ஜோடி, அட்டகாசமான எபிசோட்... அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai Serial April 01 Episode Storyline

அனீஸ் விஷயத்தை சொல்லி முடித்ததும் நடேசன், இப்போது பிரச்சனை சமாளித்து விட்டீர்கள், இனி என்ன செய்யப்போகிறீர்கள் என கேட்க அனீஸ் தெரியவில்லை என்கிறார். நடேசன் என்ன தெரியவில்லை, சட்டுபுட்டுனு சீக்கிரம் இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யுங்கள் என்கிறார்.

எபிசோட் கடைசியில், கடற்கரை சென்ற நிலா-சோழன் மிகவும் சந்தோஷமாக தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்ச நேரம் இருவரும் விளையாடிவிட்டு உட்கார நிலா சோழனுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பிக்கிறார்.

நாளுக்கு நாள் நெருக்கமாகும் நிலா-சோழன் ஜோடி, அட்டகாசமான எபிசோட்... அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai Serial April 01 Episode Storyline

அவர் அட்வைஸ் கேட்ட சோழன், நீங்கள் என்னை விட்டு செல்லப்போகிறீர்களா, அதற்காக இந்த அட்வைஸா என கேட்க, அவர் இல்லை நான் உங்களை விட்டுலாம் போக மாட்டேன். எனக்காக எவ்வளவோ செய்துள்ளீர்கள், உங்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்கிறார்.

உடனே நீங்கள் என்னுடன் இருந்தாலே போதும் என கூற நிலா என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் நான் தருகிறேன் என்கிறார். அதற்கு சோழன் என்ன கேட்கப்போகிறார் என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US