சோழன் சொன்ன ஒரு வார்த்தை, கடும் கோபத்தில் நிலா... அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை
4 அண்ணன்-தம்பிகள் கதை என்றாலும் வித்தியாசமான கதை அமைப்புடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை சீரியல்.
கதையில் சவாரி சென்ற இடத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட சோழன் வசமாக போலீஸ் குடும்பத்திடம் சிக்கிக்கொள்கிறார், ஆனால் அந்த பிரச்சனைக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சோழனை காப்பாற்ற வந்த சேரன், பாண்டி இருவரும் தங்களது சகோதரரையே குற்றம் சொல்ல நிலா மட்டும் உண்மையை கண்டுபிடித்து சோழனுக்கு ஆதரவாக பிரச்சனையை தீர்க்கிறார். தனது சகோதரர்களே தன்னை நம்பவில்லையே என சோழன் மிகவும் வருத்தப்பட்டு வீட்டிற்கு வந்து சண்டை போடுகிறார்.

எபிசோட்
சேரன்-பாண்டியிடம் கோபப்பட்டு நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறும் சோழனை அவர் ஒரு ரெஸ்டாரன்ட் அழைத்து சென்று அவரிடம் பேசுகிறார். எப்படியோ சோழனை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

வீட்டிற்கு வந்த சோழனிடம், சேரன், பாண்டி இருவரும் கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்கிறார்கள். பின் நாளைய எபிசோடின் புரொமோவில், சந்தாவை அழைத்து வர பாண்டி மற்றும் சோழன் அவரது ஊருக்கு செல்லலாம் என பிளான் செய்கிறார்கள்.
அப்போது நிலா, நீங்கள் செல்வது எல்லாம் சரியாக வராது, உங்களுடன் பொறுப்பான ஒரு நபர் வேணடும் என கூற சேரன் அண்ணனை விட பொறுப்பான நபர் யார் என சோழன் யோசிக்கிறார்.

உடனே நிலா என்னை பார்த்தால் பொறுப்பான நபர் போல தெரியலையா என கோபமாக பேசுகிறார்.