சந்தாவுடன் திருமணத்திற்கு தயாரான சேரனை கட்டியணைத்து அழுத கார்த்திகா... அய்யனார் துணை சீரியல் புரொமோ
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் அய்யனார் துணை சீரியலில் திருமண கொண்டாட்டம் கலைகட்டியுள்ளது.
சந்தாவை அவரது மாமா பீகாரில் வீட்டில் பூட்டி வைக்க அவர் திருமணத்திற்கு வருவாரா இல்லையா என்ற பரபரப்பில் கடந்த சில நாள் எபிசோட் இருந்தது.

பின் நேற்றைய எபிசோடில், நிலாவின் அப்பா பிளான் போட்டு சந்தா குடும்பத்தை சென்னை அழைத்துவர ஏற்பாடு செய்தார்கள்.
இன்றைய எபிசோடில், எப்படியோ சந்தா சென்னை வந்து திருமண வரவேற்பிலும் கலந்துகொண்டார், திருமண கொண்டாட்டம் கலைகட்டிவிட்டது.
ஆனால் கார்த்திகா மட்டும் சேரனுக்கு சந்தாவுடன் திருமணம் நடப்பது நினைத்து கஷ்டப்படுகிறார், தங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பது போல் கனவு எல்லாம் காண்கிறார்.

புரொமோ
கார்த்திகா கஷ்டப்படுவதை கண்ட அவரது அம்மா உன் வாழ்க்கையை நானே கெடுத்துவிட்டேன்.
சேரனிடம் பணம் இல்லை, நாகரீகமான குடும்பம் இல்லை என வேறொருவருக்கு திருமணம் செய்துவைத்துவிட்டேன் என அவர் கதறி கதறி அழுகிறார்.
பின் நாளைய எபிசோடின் புரொமோவில், சேரன் சந்தாவிடம் தனியாக வந்து பேசிக்கொண்டிருக்கும் போது அந்த இடம் வந்த கார்த்திகா சேரனை கட்டியணைத்து அழுகிறார். .
