பல்லவன் யாருடைய மகன்.. வெளிவரும் பல வருட உண்மை! அய்யனார் துணை சீரியல் புரோமோ
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிநடை போட்டு வரும் அய்யனார் துணை சீரியலின் வரும் வாரத்தின் புரோமோ வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் ஒளிபரப்பான அய்யனார் துணை சீரியலில், வீட்டிற்கு வந்த பல்லவனின் அம்மா பணத்தை திருடுவதை நிலா பார்த்துவிட்டார். கையும் களவுமாக மாட்டிக்கொண்ட அவர், உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். ஆனால், இந்த உண்மையை அறியாத பல்லவன் தனது அம்மா தன்னை விட்டு மீண்டும் வேறு எங்கோ சென்றுவிட்டார் என வருந்துகிறான்.
புரோமோ
இந்த நிலையில், தற்போது பல்லவனின் அம்மாவை மீண்டும் நிலா பார்த்துவிட்டார். அப்போது, பல்லவன் என் மகன், அவனை நடேசனிடம் விட்டு சென்றதால்தான் அவர் என் மீது கோபமாக இருக்கிறார் என கூறுகிறார்.

இதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்கிறார் நிலா. இதன்பின் நடேசனிடம் வந்து, பல்லவன் உங்களுடைய மகன் இல்லையா என நிலா கேட்க, எல்லா பசங்களும் என்னுடைய பசங்கதான் என நடேசன் கூறுகிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது? பல்லவன் யார் என்பதை இனி வரும் நாட்களில் பார்ப்போம்.