வானதி-பாண்டியன் காதல் கதையில் வந்த புதிய டுவிஸ்ட்.... அய்யனார் துணை சீரியல் எபிசோட்
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் தொடராக உள்ளது அய்யனார் துணை.
சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என 4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல். இப்போது கதையில் 3 ஜோடிகளின் காதல் கதை தான் ஒளிபரப்பாகி வருகிறது.

சோழன், ராகவ் நிலா தன்னுடைய ஆள் என கூறியதை கேட்டு கடுப்பாக இருக்க அந்த விஷயத்தை நிலாவிடமும் கூறிவிடுகிறார். நிலா தனது ஆபிஸ் சென்று ராகவிடம் எனக்கு திருமணம் ஆகிவிட்டது, சோழன் எனது கணவர் என்கிறார்.
இதற்கு இடையில் சேரன்-ராகவ் சந்திப்பு எதர்சையாக நடிக்க சோழன்-நிலா திருமண விஷயம் முழுவதையும் கூறிவிடுகிறார். இதனால் ராகவ், நிலாவிடம் வந்து நான் உங்களை விரும்புகிறேன் என கூற அவர் நான் திருமணம் ஆனவள் என்கிறார்.
அப்போது ராகவ், உங்களுக்கு எப்படி திருமணம் நடந்தது என எனக்கு தெரியும் என கூறி அவருக்கு ஷாக் கொடுக்கிறார்.

பாண்டி-வானதி
பாண்டி தனது கடைக்காக சில பொருள்கள் வாங்க பெங்களூரு செல்ல கிளம்பும் போது நானும் வருகிறேன் என அடம்பிடித்து வானதி சென்றார். ஆனால் வானதி வந்தது அவரது வீட்டினருக்கு தெரியாது, இரவு ஆகியும் மகள் வீட்டிற்கு வரவில்லை என பாண்டி வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்தார்கள்.

எப்படியோ வண்டியை வேகமாக ஓட்டிவந்து வானதி அவரது வீட்டில் விட்டுவிட்டு அவரது அம்மா-அப்பாவிடம் மன்னிப்பும் கேட்கிறார். இன்றைய எபிசோடில், வானதி அம்மா-அப்பா, பாண்டி செய்த இந்த விஷயத்தை எண்ணி நல்லவிதமாக பேசுகிறார்கள்.
பாண்டி மீதான அவர்களது பார்வை மாறியிருக்கிறது, இதனை கேட்ட வானதி மிகவும் சந்தோஷப்படுகிறார்.