சேரனை அடிக்கச்சென்ற சோழன், நிலாவை திட்டிய வானதி... அய்யனார் துணை பரபரப்பு எபிசோட்
அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் தொடராக உள்ளது அய்யனார் துணை.
4 அண்ணன்-தம்பிகளின் கதையாக இந்த தொடரின் கரு இருந்தாலும் வித்தியாசமான தொடராக அமைந்தது. இந்த வார கதைக்களம் மிகவும் பரபரப்பான இருக்கும் என்பது வார புரொமோ பார்க்கும் போது தெரிகிறது.

எபிசோட்
இன்றைய எபிசோடில், ராகவ் சொன்ன விஷயத்தால் கடும் கோபத்தில் வீட்டிற்கு வந்த நிலா, சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா, என்ன செய்து வைத்துள்ளீர்கள் என கேட்க அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
ராகவ் எனக்கு தவறாக மெசேஜ் செய்வது, பேசுவது என இருந்தான், இதனால் சோழன் எனது கணவர் பார்த்து இருந்துகொள்ளுங்கள் என காலையில் தான் சொல்லி வைத்தேன், ஆனால் அதற்குள் நீங்கள் எல்லா உண்மையையும் சொல்லி வைத்துள்ளீர்கள்.

இரவு என்னை வெகு நேரம் ஆபிஸில் இருக்க வைத்து உங்களுக்கு தான் நிஜ கல்யாணம் இல்லையே நீங்கள் ஏன் அங்கு இருக்க வேண்டும், தனியாக நான் வீடு பார்க்கிறேன் அங்கே இருங்கள் என என்னென்னவோ பேசுகிறான் என்றார்.
உடனே கோபத்தில் சோழன் சேரனிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என கோபமாக கேட்க உடனே தனது அண்ணனை அடிக்க கை ஓங்குகிறார். உடனே பாண்டி வந்து தடுக்க கோபத்தில் சோழன் அவரை கீழே தள்ளிவிடுகிறார்.

இதைப்பார்த்த வானதி, நிலா-சோழன் கல்யாணத்தை வைத்து மோசமாக பேசுகிறார். உங்களுக்கு பாண்டியை பற்றி பேச என்ன தகுதி உள்ளது, நீங்களே செய்துகொண்டது பொய் கல்யாணம், நாங்கள் உண்மையாக காதலிப்பவர்கள், எங்களை பற்றி நீங்கள் பேசலாமா.
இதில் இவங்க வந்த பிறகு தான் இந்த வீடு, வீடா மாறியது, நீ கஷ்டப்பட்டு கடை திறந்தாலும் அதற்கு அவங்க தான் குத்துவிளக்கு ஏத்தனும் என எவ்வளவு பேசினீர்கள் என நிலாவை மோசமாக விமர்சனம் செய்கிறார்.

பாண்டி எவ்வளவு சொல்லியும் வானதி தான் சேர்த்து வைத்த மொத்த கோபத்தையும் இறக்கியுள்ளார்.
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
மெர்சல் பிரச்சனை: விஜய்- எடப்பாடி சந்திப்பு- இரவோடு இரவாக தீர்வு: அமைச்சர் சொன்ன தகவல் IBC Tamilnadu