திடீரென வீட்டில் இருப்பவர்களை கைது செய்ய வந்த போலீஸ்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ

By Yathrika Feb 11, 2026 04:30 AM GMT
Report

அய்யனார் துணை

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் அய்யனார் துணை. 

4 அண்ணன்-தம்பிகள் கதை என்றாலும் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது, இந்த வார கதைக்களம் மிகவும் பரபரப்பின் உச்சமாக இருந்தது. 

திடீரென வீட்டில் இருப்பவர்களை கைது செய்ய வந்த போலீஸ்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ | Ayyanar Thunai Serial Feb 12 Promo

சேரன், சோழன்-நிலா திருமண விஷயம் ஒன்று கூட விடாமல் ராகவிடம் கூற அதனால் மிகப்பெரிய பிரச்சனையே வெடித்துவிட்டது. நிலாவிடம் ராகவ் சொன்ன விஷயத்தால் வீட்டிற்கு வந்த நிலா சேரனிடம் கோபமாக பேசிவிட்டார்.

இதற்கு இடையில் வானதி மனதில் வைத்திருந்த கோபத்தை எல்லாம் அந்த பிரச்சனை நேரத்தில் இறக்கிவிட்டார்.

திடீரென வீட்டில் இருப்பவர்களை கைது செய்ய வந்த போலீஸ்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ | Ayyanar Thunai Serial Feb 12 Promo

புரொமோ

இன்றைய எபிசோடில், சேரன், சோழன்-நிலா இருவரிடமும் மன்னிப்பு கேட்கிறார். நிலாவும் சேரனிடம் மன்னிப்பு கேட்டு அழும் ஒரு எமோஷ்னல் காட்சிகள் இடம்பெறுகின்றன.

திடீரென வீட்டில் இருப்பவர்களை கைது செய்ய வந்த போலீஸ்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ | Ayyanar Thunai Serial Feb 12 Promo

அடுத்து நிலா தனது அறைக்கு செல்ல அங்கு பாம்பு இருப்பதை கண்டு கத்தி பயப்படுகிறார். வீட்டில் ஓட்டைகள் இருப்பதால் பாம்பு வருகிறது என வீட்டை கொஞ்சம் மாற்ற அண்ணன்-தம்பிகள் பிளான் செய்கிறார்கள்.

இன்னொரு பக்கம் நிலா, சோழனிடம் இனி ராகவிடம் வம்புக்கு செல்லாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன், பிரச்சனை என்றால் சொல்கிறேன் என கூறுகிறார்.

பின் நாளைய எபிசோடிற்கான புரொமோவில், வீட்டிற்கு போலீஸ் வருகிறது. காரணம் வீட்டில் எங்களுக்கும் பங்கு உள்ளது, இதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது அப்படி செய்தால் வீட்டிற்கு சீல் வைக்கலாம் என்ற ஆர்டர் உள்ளது என நடேசன் உடன் பிறந்தவர்கள் போலீஸ் அழைத்து வந்து பிரச்சனை செய்கிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US