அய்யனார் துணை சீரியல் நிலா-சோழன் ஜோடி ரசிகர்கள் சூப்பர் ஹேப்பி... வைரல் போட்டோ
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் தொடராக உள்ளது அய்யனார் துணை.
இளைஞர்கள் பலரும் இணைந்து நடிக்கும் இந்த தொடர் நாளுக்கு நாள் மக்களை கவர்ந்து வருகிறது, ரசிகர்கள் அதிகம் இந்த சீரியலை பார்க்க தொடங்கிவிட்டனர்.
எபிசோட்
இன்றைய சீரியல் எபிசோடில், வானதி-பாண்டி காதல் காட்சிகள் காட்டப்படுகிறது, அவர்கள் அழகாக சிரித்து பேசிக்கொண்டிருக்க அந்த இடத்திற்கு சோழன் வந்துவிடுகிறார். அந்த நேரத்தில் அவருக்கு நிலா போன் செய்ய இருவரும் ஒரு ஹோட்டல் செல்கிறார்கள்.
அங்கு நிலாவின் அம்மா அவரின் விவாகரத்து செய்தி கேள்விப்பட்டு சரமாரி கேள்விகள் எழுப்புகிறார்.
இன்றைய எபிசோடில் இந்த இரண்டு காட்சிகள் தான் ஹைலைட்.
விருது
சீரியலில் கணவன்-மனைவியாக நிலா-சோழன் ஜோடி காட்டப்பட்டாலும் இன்னும் இவர்களுக்குள் காதல் ஏற்படவில்லை. விவாகரத்து செய்யும் முடிவில் நிலா இருக்கிறார்.
ஆனால் இதற்குள்ளேயே நிலா-சோழன் ஜோடிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துவிட்டது. எந்த ஒரு சின்னத்திரை விருது விழாவிற்கு சென்றாலும் நிலா-சோழன் ஜோடிக்கு விருது கிடைத்துவிடுகிறது.
அப்படி சமீபத்தில் நடந்த JFW விருது நிகழ்ச்சியில் இவர்களுக்கு சிறந்த ஜோடிக்கான விருது கிடைத்துள்ளது.