விவாகரத்து ஆனால் சோழன் சொன்ன விஷயம், விபத்தில் சிக்கிய நிலா... அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை
சீரியல் ஆரம்பித்த நாள் முதல் ரசிகர்களின் பேராதரவு உள்ளது என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலுக்காக தான்.
வித்தியாசமான குடும்ப கதைக்களமாக உள்ளது, எந்த ஒரு பிரச்சனை எடுத்தாலும் அதை 2, 3 வாரங்கள் நீட்டிக்காமல் உடனே உடனே முடித்துவிடுவார்கள். இப்படி கதையில் சில விஷயங்கள் இடம்பெற ரசிகர்களை அதிகம் சீரியலை பார்க்க வைத்தது.

ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
தற்போது கதையில் நிலா-சோழன் விவாகரத்து பிரச்சனை தான் ஒளிபரப்பாகிறது.
இன்றைய எபிசோட்
சோழனுக்கு சேரன் போன் செய்கிறார். நீயும், நிலாவும் சேர்ந்து வாழ வேண்டும் என தான் நாங்கள் ஆசைப்படுகிறோம், கடைசியில் நீ விவாகரத்து தருவதாக ஏன் கூறினாய் என்றார்.

அவள் கேட்பது கொடுத்தாலது அவள் என்னைப்பற்றி யோசிப்பாள் என்று தான் இப்படி கூறினேன் என கோபமாக கூறுகிறார். அப்படியே விவாகரத்து கிடைத்தாலும் நான் அவளை விட மாட்டேன், கண்டிப்பாக நிலா என்னிடம் வந்து காதலை சொல்வது உறுதி என கூறுகிறார்.
சோழன் விவாகரத்து கொடுத்த விஷயத்தை யோசித்துக்கொண்டே வண்டி ஓட்டிச்சென்ற நிலா கீழே விழுந்து விபத்தில் சிக்குகிறார்.