நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை
தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் அய்யனார் துணை.
நேற்றைய எபிசோட் கதையில், நிலா தனது லேப்டாப்பை ஆட்டோவில் மிஸ் செய்ததால் ஆபிஸில் ராகவ் கடுமையாக திட்டுகிறார். உடனே இந்த விஷயத்தை சோழனிடம் நிலா கூற அவர் லேப்டாப்பை தேடி அலைகிறார்.

கடைசியில் எப்படியோ சோழன் நிலா லேப்டாப்பை கண்டுபிடித்து அவரிடம் கொடுக்கிறார். நிலா தான் செய்த புராஜக்டை சூப்பராக காட்டி முடிக்கிறார், பாராட்டும் கிடைக்கிறது.
பின் அந்த சந்தோஷத்தில் நிலா தனது அலுவலகம் கீழ் நின்று கொண்டிருந்த சோழனை கட்டிப்பிடித்து நன்றி கூறுகிறார்.
புரொமோ
இன்றைய எபிசோட் பாதிவரை, சோழன்-நிலா தன்னை கட்டிப்பிடித்தது குறித்து நிறைய பில்டப் கொடுத்து தனது அண்ணன்-தம்பிகளிடம் கூறுகிறார். அதில் நிறைய கதையை சேர்த்து கூறுகிறார், அவர்களும் சந்தோஷப்படுகிறார்கள்.

பின் ராகவ் இந்த பெரிய புராஜக்ட் சக்சஸ் ஆனதையடுத்து எல்லோருக்கும் ட்ரீட் வைக்கிறார்.
ஆனால் அந்த இடம் நிலாவிற்கு பிடிக்கவில்லை, உடனே சோழனுக்கு போன் செய்து தன்னை அழைத்து செல்ல கூறுகிறார், அவரும் வருகிறார். பின் நாளைய எபிசோட் புரொமோவில், நிலாவை அழைத்து செல்ல சோழன் வந்தபோது ராகவ் அவரிடம் ஒரு விஷயம் கூறுகிறார்.

அதாவது அவர், நிலாவை பத்திரமாக கூட்டிட்டு போ, அவங்க நான் பார்க்கிற பொண்ணு, அவங்க என் ஆளு என்கிறார். அதைக்கேட்டு சோழன் என்ன செய்யப்போகிறார் என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.