நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட்
அய்யனார் துணை
விஜய் டிவி என்றாலே இப்போது முதலில் ரசிகர்களுக்கு நியாபகம் வருவது அய்யனார் துணை சீரியல் தான்.
வழக்கமான அண்ணன்-தம்பி கதை என்றாலும் சீரியலை கொண்டு செல்லும் விதம் புதுவிதமாக உள்ளது. எந்த ஒரு சீரியல் எடுத்தாலும் ஒரு விஷயத்தை வைத்தே பல நாள் ஓட்டுவார்கள், ஆனால் இதில் அப்படி இல்லை.

ஒரு விஷயம் தொடங்கினால் அந்த பிரச்சனை உடனேயே முடிந்துவிடுகிறது.
இப்போது கதையில் சோழன்-நிலா காதல் எபிசோடுகளுக்கான தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். சோழனுக்கு நிலாவுடன் சேர்ந்து வாழ ஆசை என்றாலும் அவர் இன்னும் தனது விருப்பத்தை வெளிக்காட்டவில்லை.
எபிசோட்
இன்றைய எபிசோடில், நிலாவிற்கு தன் மீது காதல் இல்லை என ஏற்கெனவே சோழன் வருத்தப்பட்டாலும் ராகவ் நிலா என் ஆளு என சொன்னது அவருக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுத்துள்ளது.
அதே மூடில் வந்தவர் வீட்டிலும் சகோதரர்களுடன் சண்டை போட பின் நிலா அவரை சமாதானப்படுத்துகிறார்.

அடுத்த நாள் கம்பெனிக்கு வந்த நிலாவுக்கு ராகவ் ஒரு வாட்ச் பரிசளிக்க அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டிசில் வைக்கிறார். மதுரைக்கு சவாரிக்கு வந்த சோழன் அந்த புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகிறார்.
இனி என்ன நடக்கப்போகிறது, வருத்தத்தில் சோழன் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
