சந்தோஷத்தில் கட்டிப்பிடித்த நிலா, அடுத்து சோழன் செய்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் அய்யனார் துணை.
கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. நல்ல குடும்ப கதைக்களம், எந்த ஒரு பிரச்சனை என்றாலும் உடனே முடிப்பது என அய்யனார் துணை சீரியலே வித்தியாசமாக இருக்க வரவேற்பும் அமோகமாக உள்ளது.

இப்போது கதையில் சேரன்-சந்தா காதல் டிராக், சோழன்-நிலா விவாகரத்து டிராக் என இரண்டும் ஒன்றாக செல்கிறது.
இன்றைய எபிசோட்
கடைசியாக ஒளிபரப்பான எபிசோடில், நிலா இரவு பகலாக செய்த புராஜக்ட் Laptopஐ ஆட்டோவில் மிஸ் செய்துவிட்டார். இதனால் கம்பெனியில் நிலா உயர் அதிகாரி கோபமாக திட்டிவிடுகிறார்.
இந்த விஷயத்தை நிலா-சோழனிடம் சொல்ல அவர் நான் கண்டுபிடிக்கிறேன் என வாக்கு கொடுக்கிறார். இன்றைய எபிசோடில், ஒவ்வொரு இடமாக தேடி கடைசியில் சோழன் நிலா லேப்டாப்பை கண்டுபிடித்துவிடுகிறார்.

நிலாவிடம் லேப்டாப் கொடுத்து முதலில் அவரை அந்த வேலையை முடிக்கச் சொல்கிறார். நிலா தனது லேப்டாப்பை வைத்து கொடுத்த வேலையை சிறப்பாக முடித்துள்ளார்.
அந்த சந்தோஷத்தில் சோழனை பார்க்க வந்த நிலா அவரை கட்டிப்பிடித்து நன்றி கூற அவர் தலைகால் புரியாத அளவிற்கு சந்தோஷப்படுகிறார்.
வீட்டிற்கு வந்தவுடன் தனது அண்ணன்-தம்பிகளை வைத்து ரகளை செய்கிறார். அனைவரையும் கட்டிப்பிடித்து நிலா தன்னை கட்டிப்பிடித்த விஷயத்தை கூறி சந்தோஷப்படுகிறார்.