அய்யனார் துணை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்... யாரு தெரியுமா?

By Yathrika Jul 13, 2026 10:16 AM GMT
Report

அய்யனார் துணை

பெண் இல்லாமல் ஆண்கள் மட்டுமே வாழும் ஒரு குடும்பத்தின் கதையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் அய்யனார் துணை.

அவர்களின் வீட்டிற்கு சோழனை திருமணம் செய்துகொண்டு மருமகளாக வந்தவர் நிலா என்பவரால் அந்த வீட்டின் நிலைமை அழகாக மாறுகிறது. இப்போது கடைசியாக கதைக்களத்தில் நிலா-சோழன் திருமணம் நடந்து, ஹனிமூன் முடிந்துள்ளது.

அய்யனார் துணை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்... யாரு தெரியுமா? | Ayyanar Thunai Serial July 13 Episode

மொத்தமாக குடும்பமாக கொடைக்கானல் செல்ல நடேசன் மட்டும் வீட்டில் தங்கினார். அவர் யாரும் வீட்டில் இல்லாததால் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து மது அருந்தியுள்ளார். வீட்டையே ஒரு மாதிரி மது பாட்டில்கள் என கண்டதை போட்டு மோசமாக வைத்துள்ளார்.

வீட்டிற்குள் வந்த நிலா வீட்டின் நிலைமைய கண்டு ஷாக் ஆகி வெளியே செல்கிறார். பின் சேரன், சோழன், பாண்டி ஆத்திரம் அடைந்து நடேசனை அடிக்க பாய்கிறார்கள்.

அய்யனார் துணை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்... யாரு தெரியுமா? | Ayyanar Thunai Serial July 13 Episode

புதிய என்ட்ரி

வீட்டில் நடேசனுடன் மகன்கள் சண்டை போடுகிறார்கள், பின் அவரை வெளியே அனுப்பிவிட்டு வீட்டை சுத்தம் செய்கிறார்கள். வீட்டின் நிலைமையை கண்ட நிலா வீட்டின் பின்புறம் வந்து சோகமாக நிற்கிறார்.

அடுத்து பாண்டி வானதி கடைக்கு வருகிறார், அங்கு இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது கடைக்கு புதியதாக ஒருவர் என்ட்ரி கொடுக்க வானதி கடையில் வேலை செய்பவரிடம் கஸ்டமர் வந்துள்ளார் என கூறுகிறார்.

செல்வம் யார் என்று பார்த்ததும் வாங்க டாக்டர் என கூற வானதி ஷாக் ஆகிறார். அப்படி டாக்டர் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் தெரியுமா, இதோ பாருங்கள்,

அய்யனார் துணை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்... யாரு தெரியுமா? | Ayyanar Thunai Serial July 13 Episode

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US