நிலாவை காப்பாற்றும் நேரத்தில் குடும்பத்தினர் செய்த காரியம், கடுப்பில் சோழன்... அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை
இந்த வாரத்திற்கான அய்யனார் துணை சீரியல் புரொமோவில் ஓரு கலாட்டாவான எபிசோட் வரப்போகிறது என்பது மட்டும் நன்றாக தெரிந்தது.
அதாவது சோழனை நிலா விவாகரத்து செய்ததை தெரிந்துகொண்ட அவரது அம்மா-அப்பா, சோழன் வீட்டிற்கு வந்து அதான் விவாகரத்து வாங்கிவிட்டல அதன்பின்பும் ஏன் இங்கே இருக்கிறாய் என கேள்வி எழுப்பினர்.

அவர்கள் திருவண்ணாமலை போகலாம் வா என கூப்பிட நிலா எனது வேலை இங்கே தான், சென்னை விட்டு என்னால் வர முடியாது என்று கூறினார். உடனே அவர்களது அம்மா-அப்பா சரி சென்னையிலேயே ஒரு வீடு எடுத்து அங்கு தங்கலாம் என நிலாவை அய்யனார் துணை வீட்டில் இருந்து அழைத்துச் சென்றுவிடுகிறார்கள்.

நிலாவை எப்படியாவது பேசி திருவண்ணாமலை அழைத்துச் செல்லும் பிளானை செயல்படுத்த நிலா அம்மா-அப்பா தங்களது மகளிடம் இனிக்க இனிக்க பேசினார்கள். ஆரம்பத்தில் நடித்துவந்தவர்கள் கடைசி எபிசோடில் கொஞ்சம் டெர்ரர் ஆகி நீ திருவண்ணாமலை வந்தே ஆக வேண்டும் என கண்டிஷனாக கூறிவிடுகிறார்கள்.
எபிசோட்
அவர்கள் பேசியதை கண்டு பயந்த நிலா, சோழனுக்கு போன் செய்து என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுங்கள் என்கிறார், சோழனும் ஓகே கூறி நிலா வீட்டிற்கு வருகிறார்.
சோழனை யாரும் வர வேண்டாம் என கூறிவிட்டு தனியாக செல்ல அவர் சொல்வதை கேட்காமல் சேரன், பாண்டி, பல்லவன், நடேசன் என எல்லோரும் நிலா வீட்டின் முன்பு வந்துவிடுகிறார்கள். நடேசன் தனது வண்டியை எடுத்துக்கொண்டு வந்து நிலா வீட்டின் முன்பு Horn அடிக்க நிலாவின் அப்பாவிற்கு சந்தேகம் வந்துவிடுகிறது.

இதனால் அவர் வீட்டின் கதவை பூட்டி சாவியை தன்னுடன் எடுத்துச் சென்றுவிடுகிறார். தப்பிக்க கதவை திறந்த நிலா செம ஷாக் ஆகி விஷயத்தை சோழனிடம் கூற அவர் பின்பக்கம் வா என்கிறார்.

இதற்கு இடைப்பட்ட வேலையில் சோழன் தனது சகோதரர்கள், நடேசன் கொடுத்த தொந்தரவால் டென்ஷன் ஆகிறார். பின் எப்படியோ நிலாவை சுவர் குதிக்க வைத்து அவரை வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுகிறார்கள்.
பட்டு வேட்டி சட்டையுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? IBC Tamilnadu