சோழன் குடும்பத்தை அந்த விஷயம் வைத்து அசிங்கப்படுத்தும் மனோகர், நிலா... அய்யனார் துணை
அய்யனார் துணை
தமிழ் சின்னத்திரையில் இதுவரை நாம் பார்த்து பழக்கப்பட்ட கதையாக இல்லாமல் வித்தியாசமான திரைக்கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை சீரியல். கடந்த வாரம் சீரியலில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலா-சோழன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
நிலா-சோழன் திருமணம் முடிந்த கையோடு பாண்டி-வானதி பிரச்சனை துவங்கியது.

நிலா-சோழன் திருமணம் பற்றி பேசிய வானதி வழக்கம் போல் நிலா மீது தனது கோபத்தை கொட்டினார், அப்போது கோபமான பாண்டி ஏன் எப்போது பார்த்தாலும் அவரை தப்பு சொல்லிக்கொண்டே இருக்கிற, உனக்கு என்று வேலை கிடையாதா, லட்சியம் கிடையாதா என கேட்க உடனே வானதி கோபித்துக்கொண்டு சென்றுவிடுகிறார்.
வீட்டிற்கு சென்று நான் சொந்தமாக தொழில் செய்யப்போகிறேன், மெடிக்கல் ஷாப் வைத்துக்கொடுங்கள் என தனது அப்பாவிடம் அடம் பிடித்தார்.

எபிசோட்
கடைசியில் ஒரு மெடிக்கல் ஷாப் வாடகைக்கு வருவதை தெரிந்து அதை வாங்கும் முயற்சியில் பாண்டி-வானதி உள்ளார்கள்.
அடுத்து வீட்டில் நிலா சோழனிடம் மனம் விட்டு தனது அம்மா-அப்பா பற்றி பேசுகிறார், அவர்கள் எப்படியெல்லாம் தன்னை கஷ்டப்படுத்தினார்கள் என்பதை கூறி அழுகிறார். பின் நிலா தனது குடும்பத்துடன் Receptionனிற்காக துணி எடுக்க செல்கிறார், அவரது அப்பாவும் எல்லோரையும் வரவேற்கிறார்.

நிலா அவரது அம்மா, அண்ணியுடன் புடவை எடுக்க தனியாக செல்ல, ஆண் Sectionனில் சோனுக்கு டிரஸ் எடுக்க மனோகர், தாஸ் செல்கிறார்கள்.

அங்கு அண்ணன்-தம்பிகள் ஆடைகளின் விலை கண்டு ஷாக் ஆக வில்லன் மனோகர் அவர்களை பணம் வைத்து அசிங்கப்படுத்துகிறார்.
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu
முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு! IBC Tamilnadu