நிலவை தவறாக பேசிய வானதியின் அண்ணன்.. அடித்து உதைத்த சோழனின் குடும்பம்.. கைது செய்ய வந்த போலீஸ்
மக்களின் பேராதரவைப் பெற்ற சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. சமீபத்தில் நடந்த விஜய் டிவி விருது விழாவில் கூட அதிக விருதுகளை அய்யனார் துணை சீரியல் வென்றிருந்தது. சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். தற்போது இந்த சீரியலில் என்ன நடக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.
அடிவாங்கிய வானதியின் அண்ணன்
வானதியின் அண்ணன் நிலவை பார்க்கும் இடத்தில் எல்லாம் வேண்டும் என்றே வம்பிழுத்துக்கொண்டிருந்தார். அவரை பற்றித் தப்புத் தப்பாகப் பேசி வந்தார். இதுவரை பொறுத்திருந்த நிலா, ஒரு கட்டத்தில் இவை அனைத்தையும் சேரன், சோழனிடம் அழுதபடி கூற, மொத்த குடும்பம் நிலவுக்கு துணையாக சென்று, வானதியின் அண்ணை அடித்து துவைத்துவிட்டனர்.
அடிவாங்கிய வானதியின் அண்ணன் தனது குடும்பத்திடம் இதை கூறி, போலீஸுடன் நிலா வீட்டிற்கு வந்துவிட்டார். போலீஸ் வரவும் அங்கு மக்கள் கூட்டம் கூடிவிட்டது.
காரணமே இல்லாமல் நீங்கள் அனைவரும் இவரை அடித்துள்ளீர்கள், இதனால் கைது செய்யப்போகிறேன் என போலீஸ் சொல்ல, வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த நிலா, வானதியின் அண்ணன் என்னை தவறாக பேசியதால் தான் அடிவாங்கினான் என கூறிவிடுகிறார்.
மேலும் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணை வெளியே இருந்த ஒருவன் தவறாக பேசினால், அடிப்பீர்களா இல்லையா என நிலா கேள்வி கேட்க, கண்டிப்பாக அடிப்போம் என கூடியிருந்த மக்கள், கூறுகின்றனர். இதனால் வானதியின் அண்ணன் செய்ததுதான் தவறு என தெரியவருகிறது.
வானதி - பாண்டியன்
மேலும், வானதியை பாண்டியன் தொல்லை செய்வதாக கூறி, வானதியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தது பற்றி விசாரிக்கப்படுகிறது. இதில், என்னை யாரும் தொந்தரவு செய்யவில்லை, நானும் பாண்டியனும் காதலிக்கிறோம் என கூறிவிடுகிறார்.
இதை கேட்டவுடன் வானதியை அவர்கள் பெற்றோர் போட்டு அடிக்க, வானதி திட்டுவது, அடிப்பது ஏதாவது செய்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் என பாண்டியன் கூறுகிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..